அசத்தல் சமையல்! நாரத்தங்காய் சாதம்
தேவையானவை: அரிசி & ஒரு கப், எண்ணெய் & 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் & 3, தேங்காய் துருவல் & ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு & கால் ட...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_1630.html
தேவையானவை: அரிசி & ஒரு கப், எண்ணெய் & 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் & 3, தேங்காய் துருவல் & ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு & கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு & கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு & கால் டீஸ்பூன், கறிவேப்பிலை & சிறிது, பெருங்காயத்தூள் & கால் டீஸ்பூன், நாரத்தங்காய் சாறு & ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு.
செய்முறை : அரிசியை நன்றாகக் களைந்து உதிராக வடித்துக் கொள்ளவும். பச்சைமிளகாய், தேங்காய் துருவல் இரண்டையும் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, மஞ்சள்தூள் போட்டு தாளித்து சாதத்தில் சேர்க்கவும். அரைத்து வைத்துள்ள தேங்காய், நாரத்தங்காய் சாறு, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
நாரத்தங்காய் சாதம்: பச்சைமிளகாய் ஒத்துக் கொள்ளாதவர்கள் காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.
Post a Comment