சமையல் குறிப்புகள்! மல்லிப் பூண்டு ரொட்டி
தேவையான பொருள்கள் : அரிசி மாவு - 1/4 கிலோ, பூண்டு - 15, பச்சை மிளகாய் - 4, பெரிய வெங்காயம் - 2, இஞ்சி - சிறிய துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_09.html
தேவையான பொருள்கள் :
அரிசி மாவு - 1/4 கிலோ,
பூண்டு - 15,
பச்சை மிளகாய் - 4,
பெரிய வெங்காயம் - 2,
இஞ்சி - சிறிய துண்டு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
நெய் - 50 மில்லி,
உப்பு - தேவையான அளவு,
மல்லித்தழை - சிறிது.
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்துக் கொள்ளவும். சிறிதாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மல்லித்தழை,
கறிவேப்பிலை, உப்பு, நீர் சேர்த்து, நன்றாகக் கலக்கவும்.
பின்னர் ஒரு வாழை இலையில் சிறிது நெய் தடவி அந்த மாவை அதில் வைத்து மெல்லியதாகத் தட்டவும். தோசைக் கல்லில் இட்டுச் சுடவும்.
Post a Comment