சமையல் குறிப்புகள்! அவல் கட்லெட்
தேவையானவை: அவல் - ஒரு கப், உருளைக்கிழங்கு - 2, பச்சை பட்டாணி, சோள-மாவு - தலா 2 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - 2, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_02.html
தேவையானவை: அவல் - ஒரு கப், உருளைக்கிழங்கு - 2, பச்சை பட்டாணி, சோள-மாவு - தலா 2 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - 2, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்-கொள்ளவும். பச்சைமிளகாயை நறுக்கி வைக்கவும். 2 கைப்பிடி அவலை தனியாக எடுத்து வைத்து, மீதமுள்ள அவலை கழுவி சுத்தம் செய்து 20 நிமிடம் ஊற விடவும். இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய், பச்சை பட்டாணி, இஞ்சி - பூண்டு விழுது, உப்பு சேர்த்துப் பிசைந்து விரும்பிய வடிவில் கட்லெட்களாக செய்யவும்.
இந்த கட்லெட்டுகளை கரைத்த சோளமாவில் தோய்த்து, அவலில் புரட்டி தோசைக்கல்லில் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
--------------------------------------------------------------------------------
Post a Comment