சமையல் குறிப்புகள்! பாகற்காய் ஃபிரை--எக்ஸ்ட்ரா கிரிஸ்பி ஆனியன் பக்கோடா--
பாகற்காய் ஃபிரை தேவையான பொருட்கள்: ஸ்லைஸ் செய்த பாகற்காய்-2கப், மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன், கரம் மசாலா-ஒரு டீஸ்பூன், ஆலிவ் ஆயில்-ஒரு க...
தேவையான பொருட்கள்: ஸ்லைஸ் செய்த பாகற்காய்-2கப், மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன், கரம் மசாலா-ஒரு டீஸ்பூன், ஆலிவ் ஆயில்-ஒரு கப், உப்பு-தேவையான அளவு.
செய்முறை: பாகற்காயில் உப்பு சேர்த்து ஊற வைத்து இதை அரை மணி நேரம் கழித்துப் பிழிந்து எடுக்கவும். அதை கரம்மசாலா மற்றும் மிளகாய்த்தூளில் பிசறி ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து மசாலாவில் ஊற வைத்த பாகற்காயை ஆலிவ் ஆயிலில் பொரித்து எடுக்கவும்.
இந்த ஃப்ரை டயாபடீஸ் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது!
எக்ஸ்ட்ரா கிரிஸ்பி ஆனியன்
பக்கோடா
தேவையான பொருட்கள்: வெங்காயம் -2, கார்ன்ஃபிளோர்-கடலைமாவு- தலா2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள்-காரத்துக்கு ஏற்ப, கருவேப்பிலை-சிறிதளவு, உப்பு, எண்ணெய்-தேவையான அளவு.
செய்முறை : வெங்காயத்தை மெலிதாக சீவி அதன் மீது உப்பைத் தூவவும். அரைமணி கழித்து வெங்காயத்தை நன்கு பிழிந்து இத்துடன் கார்ன்ஃபிளவர், கடலைமாவு, மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசைந்து சூடான எண்ணெயில் பொரிக்கவும்.கருவேப்பிலை தூவி அலங்கரிக்க டேஸ்ட்டான ஆனியன் பக்கோடா ரெடி!
சிவப்பு அரிசி புட்டு பால்ஸ்
தேவையான பொருட்கள்: சிவப்பு அரிசி புட்டு மாவு - 1/4 கிலோ, வறுத்த வேர்க்கடலை-ஒரு கப், வெல்லம் - 100 கிராம், தேங்காய்த்துருவல்-5 டீஸ்பூன், ஏலக்காய்-4.
செய்முறை: சிவப்பு அரிசி புட்டு மாவை லேசாகத் தண்ணீர் தெளித்து, பிசைந்து ஆவியில் 3 நிமிடங்கள் வேக வைக்கவும். இதை ஆற வைத்து வெல்லம், ஏலக்காய், வேர்க்கடலை, தேங்காய் துருவலுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதை சின்னச் சின்ன பால்களாக உருட்டிப் பரிமாறவும்.
இது இரும்புச் சத்து மிகுந்த டேஸ்டி உணவு.
Post a Comment