ஆரோக்கிய சமையல்! கீரை பருப்பு சாதம்
கீரை பருப்பு சாதம் தேவையானவை: அரிசி & கால் கப், துவரம் பருப்பு & 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் & ஒரு சிட்டிகை, ஏதாவது ஒரு கீரை & ...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_9099.html
கீரை பருப்பு சாதம்
தேவையானவை: அரிசி & கால் கப், துவரம் பருப்பு & 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் & ஒரு சிட்டிகை, ஏதாவது ஒரு கீரை & கைப்பிடி அளவு, பூண்டு & ஒரு பல், சீரகம் & ஒரு சிட்டிகை, நெய் & அரை டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பருப்புடன் மஞ்சள் தூள், முக்கால் கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் குழைய வேகவைத்துக் கொள்ளவும். இத்துடன் கீரை, பூண்டை பொடியாக நறுக்கி, சீரகம் சேர்த்து உப்பு போட்டு, கீரை வேகும் வரை குறைந்த தீயில் நன்கு கிளறவும். நெய் சேர்த்து பரிமாறவும்.
கீரை பருப்பு சாதம்: கீரையே சாப்பிடாத குழந்தைகளும் இதுபோல் சாதத்துடன் கலந்து நன்றாக மசித்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர். இதில் இரும்பு, புரதம், கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைய இருக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற போஷாக்கான உணவு.
-------------------------------------------------------------------------
Post a Comment