சமையல் குறிப்புகள் ! குண்டூர் கோழி வேப்புடு
தேவையான பொருட்கள் சிக்கன் - 500 கிராம் மிளகாய்த்தூள் - 20 கிராம் வெங்காயம் - 2 தக்காளி - 1 கறிவேப்பிலை - 1 தழை உப்பு - தேவைக்கேற்ப மல்லித்த...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_8883.html
தேவையான பொருட்கள்
சிக்கன் - 500 கிராம்
மிளகாய்த்தூள் - 20 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 1
கறிவேப்பிலை - 1 தழை
உப்பு - தேவைக்கேற்ப
மல்லித்தூள் - 1 சிட்டிகை
இஞ்சிப்பூண்டு - 15 கிராம் (விழுது)
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
எண்ணை - பொரிப்பதற்கு
மைதா - 1 தேக்கரண்டி
செய்முறை
* சிக்கனை சுத்தம் செய்து, இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், மைதா, அரிசி மாவு, உப்பு இவற்றுடன் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
* நன்கு ஊறிய பிறகு எண்ணையில் பொரித்து வைக்கவும்.
* வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து குழம்பு செய்யவும்.
* இவை நன்றாக வெந்தவுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் மற்றும் தனியாத்தூள், கறிவேப்பிலை சேர்க்கவும்.
* உப்பு தேவையான அளவு சேர்த்து வறுத்த சிக்கனை குழம்பில் சேர்க்கவும்.
* குழம்பு உலர்ந்து கெட்டியாக வரும் வரை சமைக்கவும்.
Post a Comment