சமையல் குறிப்புகள்! ராகிமோர்க் கூழ்.
பலர் மறந்துவிட்ட அல்லது மறைந்தேவிட்ட மிக பொக்கிஷமான பானம் தான், இந்த ராகிமோர்க் கூழ். ராகி தானியங்களை வாங்கி முளைக்கட்டி, வறுத்து பின்பு ப...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_8869.html
பலர் மறந்துவிட்ட அல்லது மறைந்தேவிட்ட மிக பொக்கிஷமான பானம் தான், இந்த ராகிமோர்க் கூழ்.
ராகி தானியங்களை வாங்கி முளைக்கட்டி, வறுத்து பின்பு பொடி செய்து வைத்துக் கொள்ளலாம். முடியாதவர்கள் ராகி பவுடரை வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
சுமார் 4 கப் ராகிக் கூழ் செய்யத் தேவையான பொருட்கள்:
ராகி பவுடர் 1 கப்
தண்ணீர் 4 கப்
புளிக்காத மோர் 2 கப்
உப்பு சிறிதளவு
பெருங்காயம் ½ சிட்டிகை
கடுகு 2 டீஸ்பூன்
தாளிக்க எண்ணெய் ½ கப்
மிளகுத்தூள் 2 சிட்டிகை
செய்முறை
ராகிப் பொடியை தண்ணீரில் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, பெருங்காயம், நொறுக்கிய கறிவேப்பிலை அதில் விட்டு சிறிது நேரம் தாளித்ததும் கரைத்த ராகிக் கரைசலை அதனுடன் கொட்டி கைவிடாமல் கிளறவேண்டும்.
சுமார் 5 நிமிடம் இப்படி கட்டியில்லாமல் கிளறிய பின் அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.
பின் அதில் மோர் விட்டு தேவையான தண்ணீர், உப்புவிட்டு கிளறிய பின் சில்லென்று க்ளாசில் ஊற்றிக் குடிக்கலாம்
ராகி, அதிக புரோட்டீன் ப்ளஸ் சக்தி கொடுக்கும் உணவானதால், சீக்கிரத்தில் உங்களுக்குப் பசி எடுக்காது. சீக்கிரம் பசி எடுக்காட்டி காசு மிச்சம்தானே?
Post a Comment