சமையல் குறிப்புகள்! மட்டன் பிரியாணி

``பாட்டீ... பாட்டீ... இருக்கீங்களா?'' ``என்னம்மா மனிஷா... புதுசா கல்யாணமான பொண்ணு... புருஷன்கூட இருக்காம இந்த நேரத்துல என்னைய தேடி ...

``பாட்டீ... பாட்டீ... இருக்கீங்களா?'' ``என்னம்மா மனிஷா... புதுசா கல்யாணமான பொண்ணு... புருஷன்கூட இருக்காம இந்த நேரத்துல என்னைய தேடி வந்திருக்கே?'' ``ஒண்ணுமில்லே... பாட்டீ... உங்களுக்கே தெரியும்... எனக்கு மட்டன், சிக்கனெல்லாம் பிடிக்காதுன்னு... இப்ப என்னடான்னா... என்னோட ஹஸ்பெண்ட் மட்டன் பிரியாணி வேணும்... சிக்கன் பிரியாணி வேணும்னு தினமும் கேட்குறாரு... இல்லாட்டி ஓட்டலுக்கு போய் சாப்பிடுவேன்னு சொல்றாரு... நம்ம நிலைக்கு ஓட்டலுக்கு போய் சாப்பிட்டா... கட்டுப்படியாகுமா..? நீங்களே சொல்லுங்க..!'' `ஓ... அதுக்காகத் தான் என்னைத் தேடி வந்திருக்கியா?'' ``ஆமாம் பாட்டி... நாளைக்கு அவரோட பிறந்தநாள். அதுக்கு அவருக்கு ஸ்பெஷலா மட்டன் பிரியாணியும், சிக்கன் ஸ்பெஷல் ரோலும் செஞ்சு தரச்சொன்னார். இதையெல்லாம் எப்படி செய்யணும் பாட்டீ?'' ``முதல்ல... ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்யுறதை சொல்றேன். அதுக்கு என்னென்ன தேவைன்னு சொல்றேன், ஒரு பேப்பரில் குறிச்சுக்கோ...'' ``இதோ அதுக்குத்தான் கையோட பேனாவும், நோட்புக்கும் கொண்டு வந்திருக்கேன்! சொல்லுங்கோ...'' ``மட்டன் பிரியாணிக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கோ... பாஸ்மதி அரிசி ஒரு கிலோ, மட்டன் ஒன்றரை கிலோ, நெய் கால் கிலோ, தயிர் ரெண்டு டம்ளர், பூண்டு நூறு கிராம், இஞ்சி 75 கிராம், பெரிய வெங்காயம் அரை கிலோ, தக்காளி கால் கிலோ, பச்சை மிளகாய் 50 கிராம், ஒரு எலுமிச்சம்பழம், முந்திரிப்பருப்பு 50 கிராம், தேவையான அளவுக்கு உப்பு, புதினா, மல்லி, கேசரிப் பவுடர், பட்டை, கிராம்பு, ஏலம் - இது எல்லாத்தையும் கரெக்டா வாங்கிக்கோ...'' ``ஓகே பாட்டீ... நீங்க சொன்னமாதிரி சரியா வாங்கிடுறேன்.'' ``மட்டன் வாங்கும்போது வெள்ளாட்டங்கறியா வாங்கினேன்னா... சாப்பிட சுவையா இருக்கும்.'' ``சரிங்க பாட்டீ... எப்படி செய்யுறதுன்னு சொல்லுங்க... எழுதிக்கிறேன்.'' ``குக்கரை அடுப்புல வச்சு... நல்லா சூடானதும்... நெய்யை ஊத்து. நெய் சூடானதும் ஏலம், பட்டை, கிராம்பை போடு. பொன்னிறமாகும் வரை வதக்கிவிட்டு, அதில் அரைத்த இஞ்சி, பூண்டு விழுதுகளைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.'' ``ஒரு நிமிஷம் பாட்டி... இதுல... அரைச்ச இஞ்சின்னு சொன்னீங்களே...'' ``ஏற்கனவே இதையெல்லாம் அரைச்சு வச்சுக்கணுமா?'' ``ஆமா... அதுக்கப்புறமா... கழுவி சுத்தம் செஞ்சு வச்சிருக்குற... மட்டன் துண்டுகளை போட்டு... நல்லா கிளறு.... தயிரு... நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், உப்பு போட்டு கிளறிவிட்டு... ஒரு பத்து நிமிஷம் வேகவிடு.'' ``ஓகே... பாட்டி... எல்லாம் முடிஞ்சிடுச்சா? ``இல்லே... பாதிதான் முடிஞ்சிருக்கு... பாஸ்மதி அரிசியைக் கழுவி 15 நிமிஷம் தண்ணீரில் ஊறவை. ஒண்ணுக்கு ஒண்ணு விகிதத்துல... தண்ணீ வச்சு... அதுல கொஞ்சம் உப்பு போடு அரிசியை தனியாக வேற பாத்திரத்தில் வேக வச்சுடு.'' ``சூப்பர் பாட்டி... ஸ்கூல்ல... சொல்லிக் கொடுக்குற மாதிரி சொல்றீங்க... வரிசையா நீங்க சொல்றதை எல்லாம் எழுதிக்கிட்டே வர்றேன்... அப்புறம் என்ன செய்யணும் பாட்டி?'' ``குக்கரில் உள்ள குருமாவுல எலுமிச்சை சாறை ஊத்தி புதினா, மல்லித்தழை போட்டு கொதிக்கவிடு. கொதிக்கும் குருமாவில் வேக வைத்திருக்கும் சாதத்தை போட்டு கிளறி சமப்படுத்து. அப்புறம் கேசரி பவுடரை சிறிது பசும்பாலில் கலந்து பிரியாணி மீது ஒரு பக்கமாக ஊத்தி, மூடி வெயிட் போட்டு வைக்கவும். அஞ்சு நிமிஷம் கழிச்சு... நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப்பருப்பைப் போட்டு கிளறி பிரியாணியை வேறு பாத்திரத்தில் எடுத்து வச்சிடு. உன்னோட புருஷன் சாப்பிடும்போது பரிமாறினா மனுஷன் அசந்துடுவான்... பிரியாணி பார்க்க சிகப்பு, வெள்ளைக் கலரில் அழகாகவும்... சாப்பிடுவதற்கு ருசியாக சுவை அதிகமாவும் இருக்கும். அப்புறம் கேட்டுக்கோ... எப்பவுமே உன்னோட புராணம்தான் பாடுவான்!'' ``போங்க பாட்டீ... எனக்கு வெட்கமா இருக்கு..! அடுத்து சிக்கன் ரோல் செய்யுறதைப் பத்தி சொல்லுங்க பாட்டீ?'' ``எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் கால்கிலோ, இஞ்சி ஒரு துண்டு, பூண்டு 4 பல், கரம் மசாலா ஒரு ஸ்பூன், பெரிய வெங்காயம் ரெண்டு, உருளைக் கிழங்கு நூறு கிராம், கேரட் துருவல் 3 டீஸ்பூன், 4 பச்சை மிளகாய், பிரட் தூள் 200 கிராம், கொஞ்சம் மல்லித்தழை, தேங்காய் துருவல் 3 ஸ்பூன், ரிபைன்ட் ஆயில் 200 கிராம், தேவைக்கேத்த உப்பு - இதையெல்லாம் கரெக்டா வாங்கிக்கோ...'' ``சரிங்க பாட்டி... செய்முறையை சொல்லுங்க... எழுதிக்கிறேன்.'' ``முதல்ல... சிக்கன் துண்டுகளை மஞ்சள் பொடி போட்டு நல்லா கழுவிக்கோ... அதை வாணலியில் போட்டு வதக்கி, அதை மிக்ஸியில் போட்டு தூள் பண்ணிக்கோ... வெங்காயம், கேரட் ரெண்டையும் பொடியாக நறுக்கி, கொஞ்சம் எண்ணை விட்டு வதக்கிடு. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தேங்காய் இதையெல்லாம் நைஸா... அரைச்சுக்கோ. உருளைக் கிழங்கை வேகவச்சு, தோலை உரிச்சு... மசித்துவிடு. அதோட... உப்பு, கரம் மசாலா, மல்லித்தழை எல்லாத்தையும் போட்டு பிசைஞ்சு... சின்ன சின்ன உருண்டையா... உருட்டி... அதை பிரட் தூளில் புரட்டி எடுத்து எண்ணையில் பொரித்து எடு. இப்ப... சிக்கன் ரோல் ரெடி... இதை சாப்பிட்டா... உன்னைத்தான் சமையலுக்கே ராணின்னு சொன்னாலும் ஆச்சரியமில்லே..!'' உன்னோட புருஷன் சாப்பிடும்போது பரிமாறினா மனுஷன் அசந்துடுவான்... ``போங்க பாட்டீ... நீங்க ரொம்பத்தான் புகழ்றீங்க... நீங்க சொன்னதுலேயே எல்லாமே தெள்ளத்தெளிவா விளங்கிடுச்சு... சமையல்ல... ஜமாய்ச்சுடுறேன்... வர்றேன் பாட்டீ...''

Related

சமையல் குறிப்புகள் 1793511975879899997

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item