சமையல் குறிப்புகள்! குங்குமப்பூ பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி & 2 கப், கேரட் & 2, பீன்ஸ் & 8, பெரிய வெங்காயம் & 2, பச்சை மிளகாய் & 3, இஞ்சி&பூண்டு விழுத...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_7852.html
தேவையானவை: பாசுமதி அரிசி & 2 கப், கேரட் & 2, பீன்ஸ் & 8, பெரிய வெங்காயம் & 2, பச்சை மிளகாய் & 3, இஞ்சி&பூண்டு விழுது & 2 டீஸ்பூன், புதினா & ஒரு கைப்பிடி, உப்பு & தேவையான அளவு, குங்குமப்பூ & அரை கிராம், பால் & 2 டேபிள்ஸ்பூன். தாளிக்க: பட்டை & ஒரு துண்டு, லவங்கம் & 2, ஏலக்காய் & 2, நெய் & 4 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசியைக் கழுவி ஊறவைத்து, சிறிது உப்பு சேர்த்து, பதமாக வடித்துக் கொள்ளுங்கள். கேரட், பீன்ஸ் இரண்டையும் பொடியாக நறுக்குங்கள். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். மிளகாயை கீறி வைத்துக் கொள்ளுங்கள். பாதியளவு நெய்யைக் காய வைத்து, சிறு தீயில் வெங்காயம் நிறம் மாறும்வரை வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள். மீதி நெய்யை ஊற்றி, பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, காய்கறி, மிளகாய், இஞ்சி&பூண்டு விழுது, புதினா சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு, வடித்த சாதம், பாதியளவு வெங்காயம், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். பாலை சூடாக்கி, அதில் குங்குமப்பூவை கரைத்து, சாதத்தில் ஊற்றிக் கிளறி மூடி, சிறு தீயில் 15 நிமிடம் ‘தம்’ போடுங்கள். பிறகு, மீதியுள்ள வெங்காயம் சேர்த்துக் கிளறிப் பரிமாறுங்கள்.
குறிப்பு: நெய் போதவில்லை என்றால், மேலும் சிறிது சேர்க்கலாம். விருப்பப்பட்டால், சில முந்திரிப் பருப்புகளையும் நெய்யில் வறுத்துச் சேர்க்கலாம். இன்னும் ‘ரிச்’ ஆக இருக்கும்.
Post a Comment