சமையல் குறிப்புகள்! ஓட்ஸ் வடை
தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரை கப், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), பச்சை மிளகாய் - 3 (வட்டமாக நறுக்க வேண்ட...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_7637.html
தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரை கப், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), பச்சை மிளகாய் - 3 (வட்டமாக நறுக்க வேண்டும்), மிளகு, சீரகம் - கால் டீஸ்பூன் (ஒன்றிரண்டாக பொடிக்கவும்) இஞ்சி - சிறிய துண்டு (தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்), உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஓட்ஸில் வெந்நீரைத் தெளித்து ஊற வைக்கவும். உளுந்தை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, வெண்ணெய் போல் அரைத்துக்கொள்ளவும். இதனுடன் வெங்காயம் பச்சைமிளகாய், மிளகு, சீரகம், உப்பு, இஞ்சி, ஊற வைத்த ஓட்ஸைக் கலந்து, வடையாகவோ போண்டாவாகவோ சுட்டு எடுக்கவும்
Post a Comment