வாசகிகள் கைமணம்! கோடை வெயிலுக்கு கோகனட் கீர்!
தேவையானவை: பொடியாக நறுக்கிய வழுகல் தேங்காய், மாதுளை முத்துக்கள், வடிகட்டிய வெல்லக் கரைசல் - தலா அரை கப், இளநீர், தேங்காய்ப்பால், நறுக்கிய த...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_7552.html
தேவையானவை: பொடியாக நறுக்கிய வழுகல் தேங்காய், மாதுளை முத்துக்கள், வடிகட்டிய வெல்லக் கரைசல் - தலா அரை கப், இளநீர், தேங்காய்ப்பால், நறுக்கிய தர்பூசணி - தலா ஒரு கப், தோல் உரித்து, பொடியாக நறுக்கிய நுங்கு - 2, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சம் பழம் - 2 (சாறு எடுத்துக் கொள்ளவும்), ஆரஞ்சு சுளை - 4, ஃப்ரெஷ் கிரீம் - 2 டேபிள்ஸ்பூன், புதினா இலை - 5.
செய்முறை: நுங்கு, வழுகல் தேங்காய், தர்பூசணி... இவற்றுடன் சிறிது தேங்காய்ப்பால் சேர்த்து அரைக்கவும். ஆரஞ்சு, மாதுளையை அரைத்து ஜூஸாக்கவும். அரைத்த நுங்கு கலவையுடன் பழ ஜூஸைக் கலக்கவும். அதில் இளநீர், வெல்லக் கரைசல், எலுமிச்சைச் சாறை சேர்த்து ஏலக்காய்த்தூளைப் போடவும். மீதமுள்ள தேங்காய்ப்பாலை சேர்த்து கண்ணாடி டம்ளர்களில் நிரப்பவும். புதினா இலைகளை மேலாக தூவி, ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து, ஐஸ் கியூப் போட்டு அருந்தவும்.
கோகனட் கீர்: நீர்ச்சத்துள்ள மற்ற பழங்களையும் இதில் பயன்படுத்தலாம்.
இரும்புச்சத்து, புரதம் நிறைந்த... கோடைக்கேற்ற குளிர்ச்சியான பானம் இது.
Post a Comment