கிச்சன் கிளினிக்! கம்பஞ்சோறு உருண்டை
தேவையானவை: நையப் புடைத்த கம்பு - 150 கிராம், கரகரப்பாக பொடித்த மிளகு - ஒரு டீஸ்பூன், சுக்குப் பொடி - ஒரு டீஸ்பூன், நசுக்கிய பூண்டு - 3 பல், ...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_6829.html
தேவையானவை: நையப் புடைத்த கம்பு - 150 கிராம், கரகரப்பாக பொடித்த மிளகு - ஒரு டீஸ்பூன், சுக்குப் பொடி - ஒரு டீஸ்பூன், நசுக்கிய பூண்டு - 3 பல், உப்பு, நீர்மோர் - தேவையான அளவு.
செய்முறை: முந்தைய நாளே கம்பை ஊற வைத்துக் கொள்ளவும். மறுநாள் 3 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, ஊறிய கம்பை அதில் போடவும். கூடவே... சுக்குப் பொடி, மிளகு, உப்பு, பூண்டு ஆகியவற்றையும் சேர்த்துக் கிளறவும். நன்றாக மிருதுவாகி கெட்டிப் பதத்தில் வந்ததும் ஆறவிட்டு உருண்டைகளாகப் பிடிக்கவும். இதை நீர்மோரில் போட்டு வைத்து, இரவு நேரத்தில் சாப்பிடவும்.
Post a Comment