சமையல் குறிப்புகள்! நெல்லிக்காய் ரசம்.
நெல்லிக்காய் ரசம். தேவையான சாமான்கள் :- துவரம்பருப்பு 1 கப், பெரிய நெல்லிக்காய் 10, தக்காளிப்பழம் 100 கிராம், சாம்பார் தூள் 3 டீஸ்பூன், சி...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_6707.html
நெல்லிக்காய் ரசம்.
தேவையான சாமான்கள் :- துவரம்பருப்பு 1 கப், பெரிய நெல்லிக்காய் 10, தக்காளிப்பழம் 100 கிராம், சாம்பார் தூள் 3 டீஸ்பூன், சிறிய கோலி உருண்டை அளவு புளி, சிறிது கொத்தமல்லி, ஒரு சிட்டிகை பெருங்காயம், கடுகு கால் டீஸ்பூன், தாளிப்பதற்கு நெய், தேவையான அளவு உப்பு.
செய்முறை :- பருப்பை வேகவைக்கவும், நெல்லிக்காயை வேகவைத்து, தக்காளிப்பழத்தின் தோலை அகற்றி அத்துடன் நெல்லிக்காயை சேர்த்து அரைக்கவும், புளியை ஐந்து கப் தண்ணீரில் நனையவைக்கவும், களிம்பேறாத பாத்திரத்தில் புளியைக்கரைத்துவிட்டு சாம்பார்தூள், உப்பு, பெருங்காயம் மூன்றையும் போட்டு அடுப்பில் வைக்கவும், கொதித்தவுடன், வெந்த பருப்பு, அரைத்த நெல்லிக்காய் தக்காளி விழுதை போட்டு ரசத்தில் விட்டு, சற்று கொதித்தவுடன் கொத்துமல்லியைப் போட்டு, உடன் கடுகு தாளிக்கவும்
Post a Comment