வாசகிகள் கைமணம்! வெற்றிலை பஜ்ஜி
தேவையானவை: துளிர் வெற்றிலை - 10, உருளைக்கிழங்கு - 3, கார்ன் ஃப்ளார் மாவு - கால் கப், கொத்தமல்லி - ஒரு சிறிய கட்டு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_6471.html
தேவையானவை: துளிர் வெற்றிலை - 10, உருளைக்கிழங்கு - 3, கார்ன் ஃப்ளார் மாவு - கால் கப், கொத்தமல்லி - ஒரு சிறிய கட்டு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வெற்றிலையின் காம்பு, நரம்பை நீக்கி விட்டு குறுக்குவாட்டில் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, நன்றாக மசிக்கவும். கொத்தமல்லி, பச்சை மிளகாயுடன் சிறிது உப்பு சேர்த்து மையாக அரைக்கவும். மசித்த உருளைக்கிழங்குடன் அரைத்த கொத்தமல்லி, சீரகத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
வெற்றிலை பஜ்ஜி: மேல் மாவுக்கு சிறிது கடலை மாவை சேர்த்துச் செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
கார்ன் ஃப்ளார் மாவில் தேவையான தண்ணீர் சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ள வும். வெற்றிலையின் மேல், உருளைக்கிழங்கு கலவையை கால் அங்குல கனத்துக்கு தடவி சுருட்ட வும். இதை கார்ன் ஃப்ளார் கலவையில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சூப்பர் சுவையில் வெற்றிலை பஜ்ஜி தயார்!
Post a Comment