சமையல் குறிப்புகள் ! வெஜிடபிள் சூப்--உளுந்து சப்பாத்தி-- வெஜிடபிள் ரைஸ்

வெஜிடபிள் சூப் தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைகோஸ், பட்டாணி - அரை கப், தண்ணீர் - மூன்று கப், இஞ்சி - ப...

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைகோஸ், பட்டாணி - அரை கப், தண்ணீர் - மூன்று கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கோதுமை மாவு - ஒரு டீஸ்பூன் (சற்று குவித்து அளக்கவும்), மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், சர்க்கரை - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி (அ) வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி. செய்முறை: தண்ணீரை கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்ததும் காய்கறிகளை சேர்த்து அரை வேக்காடு வேக விடவும். காய்கறிகள் பாதி அளவில் வெந்து கொண்டிருக்கும்போது இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, சர்க்கரை சேர்த்து வேக விடவும். காய்கறிகள் நன்றாக வெந்ததும், கோதுமை மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். தீயைக் குறைத்து கிளறவும். மீண்டும் 3 நிமிடம் கொதித்ததும் இறக்கி, மிளகுத்தூள், வெங்காயத்தாள் (அ) கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும். இந்த காய்கறி சூப்பில் கிரீம் சேர்த்து செய்யாததால் உடல் எடை கூடாது. கலோரி குறைவு.வயிற்றுக்கும் நிறைவாக இருக்கும். --------------------------------------------------------------------------------
உளுந்து சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், சோயாமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. பூரணத்துக்கு: உளுந்து - கால் கப், காய்ந்த மிளகாய் - 2, சோம்பு - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, செய்முறை: கோதுமை மாவையும் சோயா மாவை யும் உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் மிருதுவாக பிசைந்து கொள்ளவும். ஒரு மிளகாயுடன் உளுந்தை சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் சோம்பு, உப்பு, ஒரு மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை ஒரு கிண்ணத்தில் வைத்து, ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும் (ஒரு குச்சியை விட்டுப் பார்க்கும்போது மாவு ஒட்டாமல் வர வேண்டும்). பிறகு இந்த உளுந்து பூரணத்தை ஆற வைத்து உதிர்த்துக் கொள்ளவும். கடாய் காய்ந்ததும் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, உளுந்து பூரணத்தை சேர்த்துக் கிளறி இறக்கவும். பிசைந்து வைத்திருக்கும் மாவிலிருந்து சிறிது எடுத்து உருண்டையாக்கி கிண்ணம் போல செய்ய வேண்டும். உளுந்து பூரணத்தை அதில் நிரப்பி, உருட்டி மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் சுட்டெடுக்கவும். சப்பாத்திக்குள் வேக வைத்த உருளைக்கிழங்கை வைத்து செய்வதுதான் வழக்கம். ஆனால், இந்த சப்பாத்தியில் உளுந்து பூரணத்தை வைத்து செய்வதால், புரதச்சத்து அதிகமாகக் கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான டிபன் இது. --------------------------------------------------------------------------------
வெஜிடபிள் ரைஸ்
தேவையானவை: பாஸ்மதி அரிசி சாதம் - 2 கப், கலந்த காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி) - அரை கப், வெங்காயம் - 1, தக்காளி சாறு - கால் கப், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலா - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு. தாளிக்க : நெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், முந்திரி - 4 (அ) 5. செய்முறை: நெய்யை காய வைத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், முந்திரி, சிட்டிகை உப்பு சேர்த்து 5 நிமி டம் வதக்கவும். பிறகு காய்கறிகளை சேர்த்து, வேகும்வரை வதக்கவும். தக்காளி சாறு, மிளகாய்த்தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். கரம் மசாலா, வடித்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும். எப்போதும் குழைத்த சாதத்தையே சாப்பிடும் குழந்தைகள், இந்த உதிர் உதிரான சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள். இதில் காய்கறிகளில் உள்ள அத்தனை சத்துக்களும் கிடைத்துவிடும்!

Related

சமையல் குறிப்புகள் 6497240814605972822

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item