சமையல் குறிப்புகள்! சீஸ் சப்பாத்தி ரோல்
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை சட்னி - சிறிதளவு (2 கைப்பிடி கொத்தமல்லி, ஒரு கைப்பிடி புதினா, ஒரு பச்சைமிள...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_6200.html
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை சட்னி - சிறிதளவு (2 கைப்பிடி கொத்தமல்லி, ஒரு கைப்பிடி புதினா, ஒரு பச்சைமிளகாய், தேவையான உப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, அரை டீஸ்பூன் சர்க்கரை.. இவற்றை ஒன்றாக அரைத்த விழுது), உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
பூரணத்துக்கு: துருவிய சீஸ் - கால் கப், பனீர் - கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, நெய், தேவையான தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும். இதை சப்பாத்திகளாக சுட்டெடுத்துக் கொள்ளவும். பூரணத்துக்கு கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
சுட்டெடுத்த சப்பாத்தியின் மேல், பச்சை சட்னியை சிறிதளவு தடவவும். அதன்மேல் பூரணக் கலவையை பரவினாற்போல் தூவவும். இதனை மெதுவாக பாயை சுருட்டுவதுபோல் சுருட்டிக் கொள்ளவும். சுருட்டிய சப்பாத்தி ரோல்களை தோசைக்கல் மீது வைத்து, சுற்றிலும் சிறிதளவு எண்ணெயை விட்டு, இருபுறமும் புரட்டிப் போட்டு எடுக்கவும்.
Post a Comment