சமையல் குறிப்புகள்! ஓட்ஸ் மீல் உப்புமா
ஓட்ஸ் மீல் உப்புமா: இரவு நேரத்தில் சாப்பிடக்கூடிய அட்டகாசமான உணவு தேவையானவை: ஓட்ஸ் மீல் - 100 கிராம், வெங்காயம் - 25 கிராம், தக்காளி - 20...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_277.html
ஓட்ஸ் மீல் உப்புமா: இரவு நேரத்தில் சாப்பிடக்கூடிய அட்டகாசமான உணவு
தேவையானவை: ஓட்ஸ் மீல் - 100 கிராம், வெங்காயம் - 25 கிராம், தக்காளி - 20 கிராம், கடலைப்பருப்பு, எண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பொன்நிறமாக வதங்கியதும் ஒன்றரை கப் தண்ணீர் விடவும். உப்பு சேர்க்கவும். நன்றாகக் கொதித்ததும், ஓட்ஸ் மீலை கொட்டி வேக வைத்து, கறிவேப்பிலை சேர்க்கவும். இதுவும் இரவு வேளையில் சாப்பிடக்கூடிய உணவுதான்.
Post a Comment