தேனின் பயன்பாடுகள் ஆயிரமாயிரம். சில `டிப்ஸ்'

அப்படியே சாப்பிடலாம் மனிதனுக்கு இயற்கையின் அற்புதக் கொடை தேன். உணவுப் பொருளாக, மருத்துவப் பொருளாக, அழகுசாதனப் பொருளாக தேனின் பயன்பாடுகள் ஆய...

அப்படியே சாப்பிடலாம் மனிதனுக்கு இயற்கையின் அற்புதக் கொடை தேன். உணவுப் பொருளாக, மருத்துவப் பொருளாக, அழகுசாதனப் பொருளாக தேனின் பயன்பாடுகள் ஆயிரமாயிரம். தேனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கான சில `டிப்ஸ்' இங்கே... `தேனகம்': இரண்டு குவளை ஆரஞ்சு அல்லது எலுமிச்சைச் சாறுடன் 8 குவளை தண்ணீரும், உங்க ருசிக்கேற்ப தேனும் சேருங்கள். ஐஸ் கட்டிகள் சேர்த்து `ஜில்'லென்று பருகுங்கள். தேன்- அன்னாசிப்பழ ரசம்: நசுக்கிய அன்னாசிப் பழத்தை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன், அரைக் குவளை தேன், அரைக் குவளை எலுமிச்சைச் சாறு, அரை தேக்கரண்டி உப்பு சேருங்கள். சுவையான, ஆரோக்கியம் தரும் `சாலட்' தயார். `சக்தி' பானம்: இயற்கை `யோகர்ட்' 150 மி.லி.யுடன், அதே அளவு ஆரஞ்சுச் சாறு, 30 மி.லி. தேன் சேர்த்து நன்றாக அடித்துக் கலக்குங்கள். நுரை பொங்க கண்ணாடிக் குவளையில் ஊற்றிப் பரிமாறுங்கள். சூடான பானத்தில்...: காபி, டீ போன்றவை பருகும்போது `கலோரி'களை குறைக்க விரும்புகிறீர்களா? சர்க்கரைக்குப் பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளுங்கம். சர்க்கரையை விட தேன் இனிப்பானது என்பதால் கொஞ்சம் சேர்த்தாலே போதுமானது. `தேன் வாழைக்கனி': வாழைப்பழத்தைத் தோலை உரித்துவிட்டு துண்டு துண்டாக்குங்கள். அவற்றின் மீது தேனை ஊற்றுங்கள். சுவையான பழ உணவு ரெடி! தேன் `பேசியல்': நன்றாக அரைக்கப்பட்ட பாதாம் பருப்பு ஒரு மேஜைக்கரண்டி, உலர் ஓட்ஸ் 2 மேஜைக் கரண்டியுடன், ஒரு மேஜைக் கரண்டி தேன் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். அத்துடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். இந்தக் கலவையைக் கொண்டு உங்கள் முகத்தில் மென்மையாக `மசாஜ்' செய்யுங்கள். முகமெங்கும் சீராகத் தடவி உலர விடுங்கள். வெதுவெதுப்பான நீரில் உங்கள் முகத்தைக் கழுவுங்கள். முகம் இப்போ `பளிச்'! சாப்பிடலாம்... முகத்தில் பூசலாம்...: ஒரு வெம்ளரியைச் சாறாக்கி, அத்துடன் 2 தேக்கரண்டி தேன் சேருங்கள். அதை முகத்தில் பூசி, உலர்ந்ததும் முகத்தைக் கழுவுங்கள். முகம் பொலிவு பெறக் காணுங்கள். இந்தச் சாறை ஒரு வாரம் வரை `பிரிட்ஜில்' வைத்திருந்து பயன்படுத்தலாம்; பருகலாம். குளியலுக்கு...: உங்கள் தேகம் தகதகவென்று மின்ன வேண்டுமா? நீங்கம் குளிக்கும் வெந்நீரில் கால் குவளை தேன் கலந்து குளியுங்கள். குறிப்பாக உலர்ந்த சருமக்காரர்களுக்கு இக்குளியல் மிகவும் ஏற்றது. எகிப்து பேரழகி கிளியோபாட்ரா பயன்படுத்திய அழகுக் குறிப்புங்க இது! முகத்தின் ஈரப்பதம் காக்க...: குளிர்காலத்துக்கு ஏற்ற குறிப்பு இது. 2 மேஜைக்கரண்டி தேன், 2 மேஜைக்கரண்டி பால் சேர்த்து, முகத்தில் சீராகப் பூசுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். கரும்புள்ளிகள் மறைய...: வெந்நீரையும், உப்பையும் சேர்த்து, அதை பஞ்சால் தொட்டு முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் வைத்து அழுத்துங்கள். பின்னர் அதன் மீது தேனில் நனைத்த பஞ்சை வைத்துத் தடவுங்கள். சிறிதுநேரம் கழித்துக் கழுவி, உலர விடுங்கள். தொண்டை இதமாக...: தொண்டை வலியா? அதற்கான அறிகுறìயா? எலுமிச்சைச் சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துப் பருகுங்கள். கேசம் பளபளக்கும்: தலைமுடிக்கு ஷாம்பூ தேய்த்துக் குளித்தபிறகு, ஒரு தேக்கரண்டி தேன், புத்தம் புதிய எலுமிச்சைச் சாறு, 4 குவளை வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து கேசத்தை நனையுங்கள். அப்படியே உலர விடுங்கள். கேசம் நரைத்துவிடுள் என்று பயப்படாதீர்கம். பளபளக்கும். `கொழுப்பை'க் கட்டுப்படுத்தும்: தினமும் காலையில் எழுந்தவுடனும், இரவìல் படுக்கப் போகும் முன்பும் ஒரு குவளை வெந்நீரில் தேன், கிராம்புப் பொடி சேர்த்துப் பருகுங்கள். உங்கம் உடம்பில் தேவையற்ற கொழுப்புச் சேர விடாது இது. தலைமுடியின் வறட்சியைப் போக்கலாம்: தேனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து உங்கள் தலைமுடியின் நுனிகளில் தடவுங்கள். பின்னர், வெந்நீரில் நனைத்த துணியால் 20 நிமிடங்கள் தலைமுடியைச் சுற்றி வையுங்கள். பின்னர் வழக்கம்போல் ஷாம்பூ போட்டோ, போடாமலோ குளியுங்கள். தலைமுடியின் வறட்சியைப் போக்கவும், நுனிகளில் சுருண்டுகொள்வதையும் தடுக்கவும் இந்த உத்தி உதவும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 4383823357986579077

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item