ஆரோக்கிய சமையல்! துவரம் பருப்பு சப்பாத்தி
துவரம் பருப்பு சப்பாத்தி தேவையானவை: கோதுமை மாவு & ஒரு கப், சோயா மாவு & ஒரு டேபிள்ஸ்பூன், வேகவைத்த துவரம் பருப்பு & 2 டேபிள்ஸ்ப...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_2238.html
துவரம் பருப்பு சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு & ஒரு கப், சோயா மாவு & ஒரு டேபிள்ஸ்பூன், வேகவைத்த துவரம் பருப்பு & 2 டேபிள்ஸ்பூன், பூண்டு & 2 பல், சீரகத்தூள் & அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் & ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் & அரை டீஸ்பூன், (விருப்பப்பட்டால்) எலுமிச்சை சாறு & 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்துமல்லி & ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு & தேவையான அளவு, எண்ணெய் & சிறிதளவு.
செய்முறை: துவரம்பருப்பை பூண்டு, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், சீரகத்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதனுடன் கோதுமை மாவு, சோயா மாவு, கொத்துமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து சப்பாத்தி மாவு போல் நன்கு பிசைந்து, சிறிய சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ளவும். தோசைக் கல்லில் சப்பாத்தியை இட்டு, ஒரு ஸ்பூனை பின்புறம் திருப்பி எண்ணெயில் தொட்டு, வேகும் சப்பாத்தியின் இருபுறமும் லேசாக தடவி எடுக்கவும்.
குறிப்பு: எண்ணெய் தடவுவதால் சப்பாத்தி காயாமல் மிருதுவாக இருக்கும்.
துவரம்பருப்பு சப்பாத்தி: துவரம் பருப்பு என்பது சாதாரணமாக நமது அன்றாட டயட்டில் உள்ள உணவுதான். அதை சப்பாத்தி வடிவில் சாப்பிடும்போது சாதம் போலில்லாமல் அளவு தெரிந்து சாப்பிடுவோம். இயல்பாக பருப்பு வகைகளில் உள்ள புரதச்சத்தும் உடலுக்கு கிடைத்துவிடும்.
Post a Comment