கோடை காலம் உடல் சூடு குறைய இதோ சில டிப்ஸ்கள்:!

கோடை காலம் மட்டுமல்ல... எல்லா காலங்களிலும் அதிகமாக நீர்க்கடுப்பு ஏற்படும். அதாவது அடிக்கடி சிறுநீர் வரும்போது தாங்கிக்கொள்ளமுடியாத அளவுக்கு ...

கோடை காலம் மட்டுமல்ல... எல்லா காலங்களிலும் அதிகமாக நீர்க்கடுப்பு ஏற்படும். அதாவது அடிக்கடி சிறுநீர் வரும்போது தாங்கிக்கொள்ளமுடியாத அளவுக்கு கடுப்புத் தன்மை இருக்கும். கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் உடல் சூட்டின் காரண மாக நீர்க்கடுப்பு அடிக்கடி வரும். இதற்கு உடனடி நாட்டுவைத்தியம் இருக்கிறது. வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப் பிட்டால், நீர்க்கடுப்பு சிறிது நேரத்தில் மறைந்து விடும். கடுமையாக உழைப்பவர்களுக்கும், பயணம் செய்தவர்களுக்கும் உடல் வலி, கைகால் அசதி இருக்கும். இவர்கள் முருங்கை ஈர்க்கை ரசம் வைத்து சாப்பிட்டால் வலி நீங்கி புத்துணர்ச்சி கிடைக் கும். வெள்ளரிக்காய் விதையை அரைத்து, அதனுடன் நீர் சேர்த்து வடிகட்டவும். அதனை தொடர்ந்து அருந்தி வந்தால் கல்லடைப்பு மறையும். கையில் கிடைக்கிற எந்த உணவையும் யோசிக்காமல் வாய்க்குள் போடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? கண்டிப்பாக உங்களுக்கு அஜீரண கோளாறு இருக்கும்! நீங்கள் அடிக்கடி இஞ்சி, பப்பாளி, அன்னாசி, வெள்ளரி ஆகியவற்றை சேர்த்துக் கொண்டால் நல்லது. அதேபோல், கோடை காலத்தில் வயிற்று பிரச்சினை களும் அடிக்கடி ஏற்படும். அதிலும் புளியேப்பம் வந்தால் எரிச்சலாக இருக்கும். கொஞ்சம் நெல்லிக்காய் லேகியத்தை சாப்பிட்டுவிட்டு பால் சாப்பிட்டால் புளியேப்பம் சரியாகும். முடிந்த அளவு ஆப்பிளை சாப்பிட்டு வாருங்கள்! மூளை, கல்லீரல், மலக்குடல் ஆகியவற்றில் வரும் நோய்களை நீக்கும் சக்தி ஆப்பிளுக்கு உண்டு! வெங்காயத்தை தனியாக சாப்பிட்டாலும் சரி, உணவோடு சேர்த்து சாப்பிட்டாலும் சரி! தினமும் வெங்காயம் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால், சைனஸ், மாரடைப்பு, வயிறு மற்றும் மலக்குடல் தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும்! சிலருக்கு ஒற்றைத் தலைவலி வந்து உயிரை வாங்கும். மாத்திரை சாப்பிட்டாலும் முழுமையாக தீராது! எலுமிச்சையுடன் இஞ்சி சேர்த்து சாறெடுத்து குடித்தால் ஒற்றைத் தலைவலி நீங்கும்! மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள், ஏற்கனவே மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் அன்னாசி பழச்சாறு அருந்துவது நல்லது. வயிற்றில் புழு, பூச்சிகள் இருப்பதால் அவதிப்படுகிறீர்களா? வேப்பங்கொழுந்தை அரைத்து, சாப்பிட்டு வர, வயிற்றில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி விடும்! தினமும் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள உஷ்ணம் வெளியேறும். பித்தத்தின் பாதிப்பு குறையும்! தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. சிறுநீரகத்தைத் தூண்டி, உடல் நஞ்சை வெளியேற்றும். புற்றுநோயை எதிர்க்கும் லைகோபின் மருந்தும் தக்காளியில் உள்ளது! வெந்தயக் கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. இதனால், காசநோய், இடுப்புவலி, செரிமானக் கோளாறுகள் போன்றவை மறையும். சோம்பலைத் தவிர்த்து, சுறு சுறுப்பைத் தரக்கூடியது வெந்தயக்கீரை! தினமும் நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், சீதபேதி, ரத்த பேதி, சளி, தும்மல் போன் றவை குணமாகும். நெல்லிக்காய் சாறுடன் எலுமிச்சைச் சாறை கலந்து குடித்து வந்தால் குடலில் உள்ள பூச்சிகள் அழியும்! வெங்காயத்தை சாறு எடுத்து, தினமும் ஒரு அவுன்ஸ் வீதம் நான்கு வேளை சாப்பிட்டு வந்தால், புகை பிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் கோளாறு தீரும். வெங்காயத்தை சாப்பிடுவதால் உடல் உஷ்ணம், உஷ்ணப்பகுதி, தலைவலி, விடாத தும்மல் ஆகியவை மறையும்! கோடை காலத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு மேற்கண்ட முறைகளை செயல்படுத்தி கோடையை சமாளியுங்கள்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 7798621661424982725

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item