ஆரோக்கிய சமையல்! வெஜ் க்ரிஸ்பி பூரி
தேவையானவை: வெந்த காய்கறிகள் - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தக்காள...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_1759.html
தேவையானவை: வெந்த காய்கறிகள் - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன், (விருப்பப்பட்டால்) துருவிய பனீர், துருவிய சீஸ் - தலா 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெண்ணெயை காய வைத்து உருகியதும் இஞ்சி - பூண்டு விழுதை போட்டு வதக்கவும். பிறகு காய்கறிகள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். காய்கறிகள் நன்றாக வெந்ததும் தக்காளி சாஸ், துருவிய சீஸ், பனீர், தேவையான உப்பு சேர்த்து, கொத்தமல்லி தூவி, கிளறி இறக்கவும். இதை பானிபூரி செய்யும் பூரிகளுக்குள் அடைத்து பரிமாறவும்.
வெஜ் க்ரிஸ்பி பூரி: பானிபூரி மட்டுமே சாப்பிட்டு பழகிய குழந்தைகள், வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த வெஜ் க்ரிஸ்பி பூரியை விரும்பி சாப்பிடுவார்கள். புரதச்சத்து நிறைந்தது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டிபன்!
Post a Comment