சமையல் குறிப்புகள்! வெஜிடபுள் வடைகறி
தேவையான பொருட்கள் : கடலைப்பருப்பு - 1 கப், பாசிப் பருப்பு - ½ கப், பீன்ஸ், கேரட், கோஸ் - 1 கப், (பொடியாக அரிந்தது), பெங்களூர் தக்காளி - 2,...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_102.html
தேவையான பொருட்கள் :
கடலைப்பருப்பு - 1 கப், பாசிப் பருப்பு - ½ கப், பீன்ஸ், கேரட், கோஸ் - 1 கப், (பொடியாக அரிந்தது), பெங்களூர் தக்காளி - 2, (பொடியாக அரிந்தது), பெரிய வெங்காயம் - 2 (பொடியாக அரிந்தது). இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன், ப. மிளகாய் - 3 (அரிந்தது), மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், மல்லித்தூள் ½ டீஸ்பூன், தாளிக்க - பெருஞ்சீரகம், கருவேப்பிலை, எண்ணெய் - தேவையான அளவு, உப்பு, மஞ்சள் தூள் - சிறிதளவு, பொடியாக நறுக்கிய மல்லித்தழை சிறிதளவு.
செய்முறை :
கடலைப்பருப்பு, பாசிப் பருப்பு இரண்டையும் 1½ மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின் தண்ணீரை வடித்துவிட்டு, மிக்ஸியில் இட்டு கரகரவென அரைத்தெடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருஞ்சீரகம் போட்டு வெடித்ததும் கருவேப்பிலை, இஞ்சி, பூண்டு விழுது போடவும். பின் அரிந்து வைத்துள்ள காய்கறிகள், தக்காளி, வெங்காயம், ப.மிளகாய் எல்லாவற்றையும் போட்டு நன்றாக வதக்கவும். பின் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் பொடி, உப்பு முதலியவற்றையும் போட்டுக் கலக்கி நன்றாக வேகவிடவும்.
மற்றொரு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அரைத்து வைத்துள்ள பருப்புக்களை கனமான அடையாகத் தட்டி சுற்றிலும் சிறிது எண்ணை ஊற்றி வேகவிடவும். நன்றாக வெந்ததும் எடுத்து சிறுசிறு துண்டுகளாகக் கட் செய்துகொள்ளவும்.
இதற்குள் காய்கறிகள் வெந்திருக்கும். அதில் வேகவைத்தெடுத்த பருப்புத் துண்டுகளைப் போட்டு நன்றாகக் கிளறவும். கடைசியாக மல்லித்தழை போட்டு இறக்கவும்.
சப்பாத்தி, பூரி, தோசை என்று எல்லாவற்றுக்கும் பெஸ்ட் காம்பினேஷன் இது.
(குறிப்பு : காய்கறி வேக வைக்க தண்ணீர் அதிகமாக ஊற்றவேண்டாம். குறைந்த அளவே ஊற்றவேண்டும். இல்லையென்றால் குழம்பு போல் ஆகிவிடும்.)
Post a Comment