ருசியான ரெசிபி!! ஓட்ஸ் - வீட் ரொட்டி
தேவையானவை: ஓட்ஸ் மீல் மாவு, முழுகோதுமை மாவு - தலா 50 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 30 கிராம், கொத்த மல்லி - 15 முதல் 20 கிராம், இஞ்சி...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_10.html
தேவையானவை: ஓட்ஸ் மீல் மாவு, முழுகோதுமை மாவு - தலா 50 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 30 கிராம், கொத்த மல்லி - 15 முதல் 20 கிராம், இஞ்சி - 10 கிராம், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஓட்ஸ் மீல் மாவு, கோதுமை மாவு இரண்டையும் கலந்து வெந்நீர் விட்டு சிறிது உப்பு சேர்த்துப் பிசையவும். இதனால் மாவு நன் றாக மிருதுவாகிவிடும். இதனுடன் வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து, சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல் இட்டு, தோசைக் கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.
கொத்தமல்லி சட்னி, வெஜிடபிள் சாலட் போன்றவை இதற்கு சரியான சைட் டிஷ். இரவில் சாப்பிட மிகவும் ஏற்றது.
Post a Comment