ஆரோக்கிய சமையல்! புரொட்டீன் உசிலி
தேவையானவை: பீன்ஸ் - கால் கிலோ, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு - தலா கால் கப், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பெருங்க...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_08.html
தேவையானவை: பீன்ஸ் - கால் கிலோ, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு - தலா கால் கப், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயம் - கால் டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மூன்று பருப்புகளையும் ஒன்றாக அரை மணி நேரம் ஊற வைக்கவும். பீன்ஸை பொடியாக நறுக்கி, அரை கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து குக்கரில் வேக விடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, ஒரு நிமிடம் கழித்து மெதுவாக பிரஷரை எடுத்து விடவும்.
பருப்புகளை தண்ணீர் வடித்து உப்பு, மிள-காய், பெருங்காயம் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை இட்லி தட்டில் பரப்பி, ஆவியில் வேக விட்டு எடுக்கவும். ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, உதிர்த்து வைத்துள்ள பருப்பு, கறிவேப்பிலை, வெந்த பீன்ஸை சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கினால், கமகம உசிலி தயார்.
பீன்ஸ் வேக வைத்த தண்ணீர் மீதமிருந்தால் சாம்பார், ரசத்தில் சேர்த்து விடலாம்.
புரொட்டீன் உசிலி: பருப்புகளைக் கலந்து செய்வதால், புரதச்சத்து நிறைந்தது இந்த உசிலி. பீன்ஸில் நார்சத்து அதிகம் உள்ளதால், சாதத்துக்கு பதில் உசிலியை நிறைய சேர்த்துக் கொள்ளலாம்
___________________________________________________________________
Post a Comment