உடல் நல குறிப்புக்கள்!

உடல் பெருக்கக் காரணம் நமது உடலுக்கு ஆரோக்கியம் வந்தால் அழகும் தானாகவே வந்துவிடும். நொறுக்குத் தீனிகள் அடிக்கடி சாப்பிட்டால் உடம்பு பெருத்த...

உடல் பெருக்கக் காரணம் நமது உடலுக்கு ஆரோக்கியம் வந்தால் அழகும் தானாகவே வந்துவிடும். நொறுக்குத் தீனிகள் அடிக்கடி சாப்பிட்டால் உடம்பு பெருத்து விடும். கீரைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் ஏற்படாது. அடிக்கடி நீர் குடித்தால்... ஒரு நாளைக்கு 8 டம்ளர் நீர் பருகவேண்டும். இதனால் உடல் வறண்டு போகாமல் இருக்கும். அதேபோல் மாதத்திற்கு ஒருநாள் வெறும் திரவ உணவை உட்கொண்டால் உடல் உறுப்புகள் வலிமை பெறும். காலை உணவைக் கண்டிப்பாக சாப்பிடவேண்டும். அப்போதுதான் மூளை சுறுசுறுப்பாக இயங்கும். சைவமா... அசைவமா? சைவ உணவு சாப்பிடுவோரை விட அசைவ உணவு சாப்பிடுவோரே குண்டாகி வருகின்றனர். ஏனென்றால் அசைவ உணவில் கொழுப்புச் சத்துகள் அதிகமாக உள்ளன. ஆனால் அசைவ உணவில் உடலுக்குத் தேவையான புரதசத்தும், ஊட்டச் சத்தும் கிடைக்கிறது. எத்தனை கலோரி தேவை? ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு 1200 கலோரிகள் தேவைப் படுகிறது. அதற்கு மேல் நாம் சாப்பிடும்போது அவை ஜீரணமாகாமல் உடம்பிலேயே தங்கிவிடுவதால் நாளடைவில் பல்வேறு நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. வைட்டமின் சி குறைந்தால்... முட்டைக்கோஸ், ஆரஞ்சு, கேரட், கீரை, வெங்காயம், தக்காளி, எலுமிச்சை ஆகியவற்றில் வைட்டமின் சி உள்ளது. இது உடலில் குறைந்தால் உடல் எலும்புகள் பலவீனமாகும். பற்களில் பிரச்சினைகள் ஏற்படும். உதடுகள் வெடித்தால்... கல்லீரல், கோழி, மீன், பால், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் வைட்டமின் பி2 அதிகமாக உள்ளது. இது உடலில் குறைந்தால் உதடுகள் வெடிக்க ஆரம்பித்து விடும். ஆரோக்கியத்துக்கு அவசியம்! வெண்ணை, பால், பச்சைக் காய்கறிகள், ஆரஞ்சு, எலுமிச்சை, இறைச்சி, வாழைப்பழம், அன்னாசிபழம் போன்ற உணவுகளில் வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. சாப்பிடும்போது இடையே... உணவு சாப்பிடும்போது இடையில் அதிகமாக தண்ணீர் குடிக்கக் கூடாது. இவ்வாறு அதிகமாக நீர் அருந்தினால் உணவு ஜீரணம் ஆகாது. அதுபோல் உடலுக்குத் தேவைப்படும் தாதுக்கள், வைட்டமின்களை உடல் ஏற்றுக் கொள்ளாது. தூங்கி எழுந்தவுடன்... தூங்கி எழுந்தவுடன் விடியற்காலையில் வெறும் வயிற்றில் ஒன்றரை லிட்டர் நீர் குடிப்பது உடல் ஆரோக்கியம் பெறும். இதனால் மலச்சிக்கலும் ஏற்படாது. மேலும் சிறுநீர் கற்களும் ஏற்படாது. நீர் குடிக்காவிட்டால்... உடற்பயிற்சி செய்பவர்கள் வேர்வையாக வெளியிட்ட நீரை ஈடுகட்ட தாராளமாக நீர் அருந்துவதில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு சிறுநீர் கற்கள் ஏற்பட வாய்ப்புண்டு! அதேபோல், தக்காளி, பால், உப்பு போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிடுபவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். வேப்பிலையின் நன்மை! வேப்பிலைக் கொழுந்து கசக்காது! இதில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ உள்ளன. வேப்பிலைக் கொழுந்தை சுத்தம் செய்து துவையல் அரைத்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இது ரத்தத்தை சுத்தப்படுத்தும். விஷக் கிருமிகளைக் கொல்லும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 1444255862209071978

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item