பால் போன்ற முகத்துக்கு பப்பாளி!

பால் போன்ற முகத்துக்கு பப்பாளி! வயோதிகத்தை விரட்டி இளமையைத் தக்க வைக்கும் அற்புதப் பழம் பப்பாளி. எல்லா விதமான சருமத்துக்கும் ஏற்ற பப்பாளிய...

பால் போன்ற முகத்துக்கு பப்பாளி! வயோதிகத்தை விரட்டி இளமையைத் தக்க வைக்கும் அற்புதப் பழம் பப்பாளி. எல்லா விதமான சருமத்துக்கும் ஏற்ற பப்பாளியின் பலன்களைப் பார்ப்போமா? டீன்-ஏஜில் முகம் முழுக்கப் பருக்கள் ஏற்படும். அவை புண்ணாகி, காய்ந்து போவதால் முகம் சொரசொரப்பாகி, அழகை கெடுக்கும். இதற்கு பப்பாளியில் நிரந்தரத் தீர்வு உண்டு. மேல்பகுதி கரும்பச்சையாகவும் உள் பகுதி சிவப்பாகவும் உள்ள பப்பாளிப் பழத்தைத் தோலுடன் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை முகத்தில் பூசி வர, முகத்தில் உள்ள பருக்கள் மறையும். சொரசொரப்பும் மாறி, சருமம் மிருதுவாகும். வயதாவதால் முகத்தில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்குகிறது பப்பாளி. கனிந்த பப்பாளிப் பழத்தைத் தோலுடன் அரைத்து, முகத்தில் பூசி வந்தால், சுருக்கமும் தொய்வும் ஓடிப் போகும். முகம் எப்போதும் இளமைத் தோற்றத்துடன் வசீகரிக்கும். சிலருக்கு சருமம் வறண்டு கரடுமுரடாக இருக்கும். இதற்கும் வைத்தியம் இருக்கிறது பப்பாளியில்.. தோலுடன் அரைத்த முற்றிய பப்பாளி பழத்தின் விழுது - 2 டீஸ்பூன், 'வைட்டமின் ஈ' ஆயில் - ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இவை கலக்கும் அளவுக்கு வெள்ளரி விதை பவுடரை சேர்த்து பேஸ்ட் ஆக்குங்கள். இந்த கிரீமை முகம், கழுத்துப் பகுதியில் தேய்த்துக் கழுவுங்கள். ஒரு வாரம் தொடர்ந்து இந்த சிகிச்சையைச் செய்து வர, சருமம் மிருதுவாகி.. முகம் பால் போலாகி விடும். வெயிலில் அலைவதால் முகம் கருமை படிந்து டல்லாகத் தெரியும். ஒரு தாமரை இலையுடன் ஒரு பப்பாளி இலையை சேர்த்து அரைத்து, உடலில் வெயில் படும் இடங்களில் தேய்த்துக் கழுவுங்கள். இழந்த நிறத்தை மீட்டு, பொலிவைக் கூட்டும் இந்த இலை பேஸ்ட்! கூந்தலின் வறட்சியைப் போக்கி, சீக்காளி கூந்தலுக்கு போஷாக்கு தருகிறது பப்பாளி. முற்றிய பப்பாளி இலைகளை தண்ணீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். இலையை எடுத்து கைகளால் கசக்கினால் நுரை போல வரும். அதை அப்படியே அதே கொதி நீரில் கரைத்து வடிகட்டுங்கள். இந்த நீரில் கூந்தலை அலசுங்கள். வாரம் ஒருமுறை இதைச் செய்து வர, பட்டுப் போல் மென்மையாகும் கூந்தல். பப்பாளி இலைகளுடன் 5 செம்பருத்தி இலைகளை சேர்த்துக் கொதிக்க விட்டும் இதே சிகிச்சையைச் செய்யலாம். இந்த இலைகளுடன் 5 புங்கங்காய்களின் தோலைச் சேர்த்து, கொதிநீரில் போட்டு, எடுத்து, அரைத்து, சீயக்காய்க்கு பதில் தேய்த்துக் குளித்தால், தலை சுத்தமாகும். இது உடலுக்கும் குளிர்ச்சி! ஒரு பப்பாளியை தோலுடன் துருவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அது மூழ்கும் அளவுக்கு வினிகரை விட்டு, இறுக மூடி விடுங்கள். 5 வாரம் கழித்துக் கிடைக்கிற பப்பாளி வினிகர் அற்புதமான அழகு மருந்து! பப்பாளி வினிகரை பஞ்சால் தொட்டு, முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். அழுக்கெல்லாம் ஓடிப்போய் சருமம் சூப்பர் சுத்தமாகி விடும். வாரம் இருமுறை இந்த சிகிச்சையைச் செய்யலாம். பப்பாளி துண்டுகள் இரண்டை எடுத்து, விழுதாக அரைத்து, அதில் ஒரு டீஸ்பூன் பப்பாளி வினிகர், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் 'பேக்' ஆகப் போட்டு 15 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். 'ப்ளீச்' செய்தது போல முகம் பளிச்சிடும். ஒரு டீஸ்பூன் பப்பாளி வினிகர், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு கற்றாழை ஜெல்.. மூன்றையும் கலந்து, முகத்தில் தடவி, நன்றாக மசாஜ் செய்து கழுவுங்கள். ஃபேஷியல் செய்தது போல முகம் ஜொலிஜொலிக்கும். ________________________________________ ''மறையுமே மூட்டு வலி!'' '' 'விட்டமின் ஏ' நிறைந்த பப்பாளிக்கு கண் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் சக்தி உண்டு. பப்பாளி பழத்தின் சதைப் பகுதி கேன்சரின் தீவிரத்தைக் குறைக்க வல்லது. இதை 'சாலட்' ஆகச் செய்து சாப்பிடலாம். பப்பாளியை ஜூஸாக அருந்தி வர, மாதவிடாய் பிரச்னைகள் தீரும். தினமும் ஒரு பப்பாளி துண்டை சாப்பிட்டு வர, மலச்சிக்கல் நீங்கி விடும். வெறும் வயிற்றில் பப்பாளி ஜூஸ் குடித்து வந்தால் குடலில் உள்ள வட்டப் புழுக்கள் அழியும். பப்பாளி, நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த, பப்பாளிக் காயை கூட்டாகச் செய்து சாப்பிடலாம். கை, கால் குடைச்சல், மூட்டு வலிகளைப் போக்கக் கூடியது பப்பாளிச் சாறு. பப்பாளி, இளமையான தோற்றத்தைத் தரும். நரம்புகளை வலுவூட்டி சக்தி கொடுக்கும். பல் ஈறுகளை வலுவாக்கி பல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும். பப்பாளியில் உள்ள சில என்சைம்கள் இதயத்தை வலுவாக்கும். ரத்த சோகையை குணமாக்கும்.''

Related

பழங்களின் பயன்கள் 674316489098712451

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item