பசலைக்கீரையின்-பயன்கள்!

ரத்தத்தைச் சுத்திகரிக்கும் ஆற்றல் பசலைக் கீரைக்கு உண்டு. பருப்புடன் சேர்த்துச் சமைத்தால் சுவையாக இருக்கும். இதில் வைட்டமின்சி, இரும்பு, சுண...

ரத்தத்தைச் சுத்திகரிக்கும் ஆற்றல் பசலைக் கீரைக்கு உண்டு. பருப்புடன் சேர்த்துச் சமைத்தால் சுவையாக இருக்கும். இதில் வைட்டமின்சி, இரும்பு, சுண்ணாம்பு, புரதம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. பற்களும் எலும்புகளும் உறுதி பெற இந்தச் சத்துக்கள் அவசியம். புகைப்பவர்களின் உடலில் அழிந்துவரும் வைட்டமின்சி சத்துக்களை ஈடு செய்ய இந்தக் கீரையை அடிக்கடி உண்ணலாம். பசலையின் இளந் தளிர்களைப் பச்சையாக மென்று சாப்பிட்டால் உடல் உஷ்ணம் விலகி,கண் எரிச்சலும் உடல் எரிச்சலும் நீங்கும். நீர்க்கடுப்பு அகலும். சில பெண்கள் கர்ப்ப காலங்களில்மலச் சிக்கல் ஏற்பட்டு, நீர் பிரியாமல் கஷ்டப்படு வார்கள். அவர்கள் மருத்துவரின் ஆலோச னையுடன், பசலைக் கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். தவிர, கருவில் வளரும் குழந்தைக்கு கால்சியம், இரும்புச் சத்து இரண்டும் கிடைப்பதால், குழந்தை நல்ல உடல் நலத்துடன் பிறக்கும். பசலைக் கீரையையும், பிஞ்சு முருங்கைக் காயையும் உணவில் நிறைய சேர்த்துக்கொண்டால் தாய்ப் பால் அதிகம் சுரக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்தக் கீரை, ஒரு வரப்பிரசாதம்! நீண்ட நாள் தலைவலியால் கஷ்டப்படுபவர்கள், பசலையின் சாறு எடுத்து நெற்றியில் தொடர்ந்து தடவி வந்தால், தீராத தலைவலியும் தீரும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் ஆற்றலும் இந்தக் கீரைக்கு உண்டு. நீர்க் கோவை, சளி போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் இந்தக் கீரையின் சாற்றை வெறும் வயிற்றில் தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால், நல்ல குணம் பெறலாம். கோடை காலத்தில் ஏற்படும் வேனிற் கட்டிகளில் சீழ் பிடித்து வேதனையை அனுபவிப்பவர்கள், இந்தக் கீரையைப் பூண்டு சேர்த்து வதக்கி, கட்டிகளின் மீது வைத்துக் கட்டினால், கட்டி உடைந்து சீழ் சுத்தமாக வெளிவந்துவிடும். பசலைக் கீரையோடு சின்ன வெங்கா யம் சேர்த்துச் சமைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், புகைபிடிக்கும் எண்ணமே பூண்டோடு ஒழியும் என்கிறார்கள்!

Related

மூலிகைகள் கீரைகள் 9153555200771761883

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item