சமையல் குறிப்புகள் ! ஆனியன் முட்டை மசாலா

ஆனியன் முட்டை மசாலா மிகவும் ஈசியாக செய்யக் கூடிய ,ருசியான சைட்டிஷ் இது. தேவையான பொருட்கள் முட்டை - 6 வெங்காயம் - 3 உப்பு - 1/2 ஸ்பூன் மிள...

ஆனியன் முட்டை மசாலா
மிகவும் ஈசியாக செய்யக் கூடிய ,ருசியான சைட்டிஷ் இது. தேவையான பொருட்கள் முட்டை - 6 வெங்காயம் - 3 உப்பு - 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் எண்ணெய் - 3 ஸ்பூன் செய்முறை முட்டையை அவித்துக் கொள்ளவும். வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் அரைத்த வெங்காயத்தை போடவும். நன்கு கிளறவும். அரைத்த வெங்காயம் வதங்க அதிக நேரம் பிடிக்கும். உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கி, எண்ணெய் பிரியும். மிளகாய்த்தூள் சேர்க்கவும். சிறிது நேரம் வதக்கி பின் முட்டையை நீளவாக்கில் நான்கு அல்லது ஐந்து இடங்களில் கீறி மசாலாவில் சேர்க்கவும். இரண்டு நிமிடம் முட்டை உடையாமல் பிரட்டி விட்டு இறக்கி பறிமாறவும். ==================================================================
முட்டை குருமா
இந்த முட்டை குருமா இடியாப்பத்திற்க்கு தொட்டுக்கொள்ள ஏற்றது தேவையான பொருட்கள் முட்டை 6 வெங்காயம் - 4 தக்காளி - 3 பச்சைமிளகாய் - 4 கறிவேப்பிலை - 1 ஈர்க்கு தேங்காய் - 1 மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன் கசகசா - 1 டேபிள் ஸ்பூன் சோம்பு - 1/2 டேபிள் ஸ்பூன் முந்திரி பருப்பு - 10 பூண்டு - 5 பல் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் ஏலம்,பட்டை - தலா 2 செய்முறை ஒரு வெங்காயத்தை நீளமாக வெட்டிக் கொள்ளவும். மீதி வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மீதியை கீறி வைக்கவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி பால் எடுத்துக் கொள்ளவும். கசகசா,பூண்டு,சோம்பு,முந்திரிபருப்பு இவற்றை மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,மிளகாய்,உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி அதில் முட்டையை ஊற்றவும். இதை இட்லி பாத்திரத்தில் வைத்து அவித்துக் கொள்ளவும். வெந்த முட்டையை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வேறு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஏலக்காய், பட்டை போடவும். பின் வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் மிளகாய்தூள்,கறிவேப்பிலை போடவும் பின் அரைத்த மசாலா சேர்த்து வாசனை வரும் வரை கிளறவும். தக்காளி,பச்சை மிளகாய் சேர்க்கவும். இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும். பச்சை வாசனை போக கொதித்ததும் முட்டைதுண்டுகளை போட்டு கொதிக்கவிடவும். தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் இறக்கி சூடாக இடியாப்பத்துடன் பறிமாறவும். பரிமாறும் அளவு 6நபர்களுக்கு ===================================================================
முட்டைக் கொத்சு
தேவையான பொருட்கள் முட்டை - 2 வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 தக்காளி - 1 மிளகுத்தூள் - 1 ஸ்பூன் உப்பு - 3 சிட்டிகை எண்ணெய் - 4 ஸ்பூன் செய்முறை வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நைஸாக அரிந்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடானவுடன் எண்ணெய் ஊற்றி, நறுக்கியவைகளை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு முட்டையை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலக்கி அதில் ஊற்றி முக்கால் வேக்காடாக இருக்கும்போதே இறக்கிவிடவும். இது ஆப்பத்திற்கு சுவையான ஒரு தொட்டுக்கறி! குறிப்பு: இதை நன்றாக வேகவைக்கக்கூடாது. விழுது போன்று குழைவாக இருக்கவேண்டும். அரை வேக்காடாக இருந்தாலும் நன்றாக இருக்கும். =================================================================== முட்டை சால்னா தேவையான பொருட்கள் முட்டை - 4 பழுத்த தக்காளி - 2 வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 தேங்காய்ப்பால் - 1கப் தேங்காய் விழுது - 1/2 கப் மல்லிக்கீரை - பாதி கட்டு மசாலாத்தூள் - 1ஸ்பூன் மல்லித்தூள்- 3ஸ்பூன் மிளகாய்த்தூள் - 2ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன் எண்ணெய் - 4ஸ்பூன் உப்பு - 1/2ஸ்பூன் செய்முறை பச்சை மிளகாய், பாதி வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு எண்ணெயில் போட்டு தாளித்து, முறுக ஆரம்பிக்கும்போது மிளகாய்த்தூள் போட்டு, பிறகு மீதி வெங்காயம், தக்காளியை நைஸாக அரிந்து போட்டு வதக்கவேண்டும். ஓரளவு கூழ் போன்று வதங்கியவுடன் தேங்காய்பால் ஊற்றி, தேங்காய் விழுது, மசாலாத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு கொதிக்கவிடவேண்டும். கொதிக்க ஆரம்பிக்கும்போது முட்டையை உடைத்து கலங்காமல் அதில் ஊற்றி, மல்லிகீரையை நைஸாக அரிந்துப்போட்டு 3 அல்லது 4 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கிவிடலாம். இது இடியப்பம், பராசப்பம் போன்றவற்றுக்கு ஒரு நல்ல, ஈஸியான சைட் டிஷ்! ==================================================================== முட்டை கட்லெட் தேவையான பொருட்கள்: முட்டை - 5 மிளகாய்தூள் - 1 கரண்டி மசாலாதூள் - 1 தேக்கரண்டி உருளைக்கிழங்கு - அரைக்கிலோ வெங்காயம் - 1 தேங்காய்பால் - அரை கப் மிளகுதூள் - 1 தேக்கரண்டி மைதா - 2 தேக்கரண்டி எண்ணெய் - 250 கிராம் செய்முறை: முட்டை, உருளைக்கிழங்கை ஆகியவற்றை வேகவைத்து தோல் எடுக்க வேண்டும். முட்டையை இரண்டாக வெட்ட வேண்டும். ஒரு முட்டையை சிறிது உப்பு மிளகு போட்டு கலக்கி வைக்க வேண்டும். வெங்காயத்தை மிக பொடியாக நறுக்க வேண்டும். உருளைக்கிழங்கை கட்டியில்லாமல் மசித்து அதனுடன் தேங்காய் பால், வெங்காயம், மைதா போட்டு நன்கு பிசைந்து சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். அதனை கையில் வட்டமாகத் தட்டி நடுவில் முட்டையை வைத்து மூட வேண்டும். அதனை கலக்கி வைத்த முட்டையில் நனைத்து ரொட்டிதூளில் நனைத்து எண்ணெயில் போட்டு இருபுறமும் சிவக்கவிட்டு எடுக்க வேண்டும். ====================================================================

Related

சமையல் குறிப்புகள் 5785805437671669174

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item