நாட்டு வைத்தியம்! வறட்டு இருமல் குணமாக..ரத்தபேதி, சீதபேதி குணமாக....நெஞ்சுச் சளி விலக.

நாட்டு வைத்தியம் வறட்டு இருமலை விரட்டி அடிக்கும் மஞ்சள்தூள்! குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லனா... தாய்மார் துடிதுடிச்சுப்போயிருவாங்க. அ...

நாட்டு வைத்தியம்
வறட்டு இருமலை விரட்டி அடிக்கும் மஞ்சள்தூள்! குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லனா... தாய்மார் துடிதுடிச்சுப்போயிருவாங்க. அப்படிப்பட்டவங்கள்லாம், இந்தப் பாட்டி சொல்ற வைத்தியத்தைக் கேட்டு நடந்தா... பதறித் துடிக்கறதுக்கு அவசியமே இருக்காது... சந்தோஷத் துள்ளல் மட்டும்தான் இருக்கும். சளிக் கோளாறுகள் குணமாக... ஆடாதொடை இலைச்சாறு மூணு சொட்டு எடுத்து, கொஞ்சம் தேன் கலந்து கொடுத்துட்டு வந்தீங்கனா... குழந்தைங்களுக்கு வர்ற சளிப் பிரச்னை இருந்த இடம் தெரியாமப் போயிரும். நெஞ்சுச் சளி விலக... தூதுவளை (3 எண்ணிக்கை) இலையை, நெய் இல்லைனா... வெண்ணெய்ல வதக்கி சாறு எடுத்து குழந்தைகளுக்கு உள்ளுக்கு கொடுத்து வந்தீங்கனா, நெஞ்சுச் சளி பட்டுனு விலகும். கல்யாணமுருங்கை இலையை சாறு எடுங்க. அதுல ஐந்தாறு துளியை எடுத்து, தேன் கலந்து உள்ளுக்கு கொடுத்து வந்தாலும் நெஞ்சுச் சளி குணமாகும். மூக்கடைப்பு, தலைபாரம், சளிக் கோளாறு வந்தா... குழந்தைங்க படுறபாடு சொல்லி மாளாது. அப்படிப்பட்ட நேரத்துல தலையணைக்குள்ள நொச்சி இலையை பரப்பி வச்சு தூங்க வச்சா போதும்... குழந்தைங்க நிம்மதியா தூங்குவாங்க. தலைபாரம் இறங்கறதோட... சளிப் பிரச்னையும் விலகி ஓடிடும். வறட்டு இருமல் குணமாக... ஒரு சிட்டிகை மஞ்சள்தூளை பால்ல கலந்து குடிக்கறதுக்கு கொடுத்து வந்தா... வறட்டு இருமல் குணமாகும். இந்த வைத்தியத்தை குழந்தைகளுக்கும் செய்யலாம். ஒரு சிட்டிகை வல்லாரை சூரணத்தைத் தேன்ல கலந்து கொடுத்து வந்தா... சளி, இருமல் குணமாகும். தூதுவளை கொடியை சிறுசு சிறுசா நறுக்கி, காய வச்சு பொடி செய்துக்கணும். அதுல ஒரு பட்டாணி அளவு எடுத்து, தேன் கலந்து உள்ளுக்கு கொடுத்து வந்தா... இருமல் மட்டுமில்ல, சளிக்கோளாறு எல்லாமே சரியாகிரும். கருஞ்செம்பைப்பூ 100 எண்ணிக்கை எடுத்து, தேங்காய் எண்ணெய்ல போட்டு காய்ச்சி தலைக்கு தேய்ச்சி வந்தா... சளி, இருமல், தலைவலி, ஒற்றை தலைவலி எல்லாமே குணமாயிரும். ரத்தபேதி, சீதபேதி குணமாக... மாசிக்காயை பொன்வறுவலா வறுத்து இடிச்சி தூளாக்கி வச்சிக்கிரணும். அதுல ஒரு சிட்டிகை எடுத்து, தேன்ல கலந்து உள்ளுக்கு கொடுத்து வந்தா... ரத்தபேதி, சீதபேதி எல்லாம் பட்டுனு நிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம் இதையெல்லாம் சமஅளவு எடுத்து பொன் வறுவலா வறுத்து, சூரணம் பண்ணி, அதோட சரிசமமா நாட்டுச் சர்க்கரை சேர்த்து வச்சிக்கிரணும். அதுல ஒரு ஸ்பூன் அளவு எடுத்து காலையில, சாயங்காலம்னு கொடுத்துக்கிட்டிருந்தா... வயித்துப்போக்கு பிரச்னை தீர்ந்துடும்.

Related

நாட்டு வைத்தியம் 5947801363513115162

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item