உறவுகளின் ஆரோக்கியத்துக்கு என்ன தேவை... ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துங்கள்.

உறவுகளின் ஆரோக்கியத்துக்கு என்ன தேவை என்று பார்ப்போம். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துங்கள். ஆனால், அன்பால் கட்டிப்போட்டுவிடாதீர்கள். உள்ளக்...

உறவுகளின் ஆரோக்கியத்துக்கு என்ன தேவை என்று பார்ப்போம். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துங்கள். ஆனால், அன்பால் கட்டிப்போட்டுவிடாதீர்கள். உள்ளக் கரைகளை, தொட்டுச் செல்லும் கடலலைகள் போல் அன்பு இருக்கட்டும். அன்பு, பாசம், காதல், உறவுகள் பற்றிப் பேசும்போது பாரசீகக் கவிஞன் கலீல் கிப்ரனின் இந்த வரிகள்தான் நினைவுக்கு வரும். நிலையான, அரவணைக்கும் உறவுகள் நமது மனநலத்துக்கு முக்கிய தேவை. நாம் நேசிக்கப்படுகிறோம் என்ற உணர்வே நமது மனச்சோர்வுகளைத் தள்ளி வைத்து, நன்றாக இருக்கிறோம் என்ற சந்தோஷ உணர்வைத் தருகிறது. அன்பும் வாழ்க்கையும் சிக்கலான விஷயங்கள். சட்டென்று பிரச்னைகளில் சிக்கி உறவுகள் குறித்து அவநம்பிக்கையையும் அதிர்ச்சியையும் நமக்கு கொடுத்துவிடும். உறவுகளை லேசாக எடுத்துக்கொள்ள முடியாது. எப்போது ஒருவரிடம் அன்பையும் பாசத்தையும் செலுத்துவது என்று முடிவு செய்கிறோமோ, அந்த நொடியிலிருந்து இருவருமே ஈருடல் ஓருயிராகத்தான் வாழவேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. அதை மதிக்கவேண்டும். ஆனால் அதற்காக ‘எனது தனித்துவம் இது’ என்று எதிரும் புதிருமாக நிற்கக்கூடாது. மற்றவரின் அன்பைவிட உலகத்தில் வேறு எதுவும் முக்கியமில்லை. தனிப்பட்ட ஆசைகள், மதம், தொழில் எதுவுமே அன்புக்கு குறுக்கே நிற்கக் கூடாது. உதாரணமாய், இருவரும் வெவ்வேறு மதத்திலிருந்து வந்திருந்தாலும் அது பிரச்னைக்குரிய விஷயமாய் இருக்கக்கூடாது. உங்கள் மதநம்பிக்கையை உங்களுடைய தனிப்பட்ட சந்தோஷத்துக்கு பயன்படுத்துங்கள். அதுவே மோதல்களுக்கும் சண்டைகளுக்கும் காரணமாக விட்டுவிடாதீர்கள். நல்ல மனிதர்களாய் வாழவேண்டும். இதுவே உங்கள் வாழ்க்கையின் அடிப்படை குறிக்கோளாக இருக்கட்டும். உறவுகள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் நீடிக்க ஐந்து விஷயங்கள் முக்கியமாகத் தேவைப்படுகின்றன. அவற்றை எப்போதும் ‘5 சி’ (5சி) என்று குறிப்பிடுவோம். காரணம் அந்த ஐந்து அம்சங்களின் ஆங்கில முதல் எழுத்து ‘சி’ (சி). மரியாதை கொடுங்கள் (Courtesy) : ஒரு விஷயம் எப்போதுமே நமக்கு வேடிக்கையாகவேதான் இருக்கும்! முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் நாம் மரியாதையாக நடந்துகொள்வோம். ஆனால், நமக்கு நெருங்கியவர்களிடம் நாம் அந்த மரியாதையைக் காட்டுவதில்லை. ‘தாங்க் யூ’ என்று நன்றி சொல்வதிலும், ஒரு காரியத்தைச் செய்யச் சொல்வதற்கு முன்பு ‘ப்ளீஸ்’ என்று சொல்வதிலும் நமது அன்பு பல மடங்கு அதிகமாய் வெளி தெரிகிறது. அதேபோல் முன்பின் தெரியாதவர்களிடம் கோபம் கொள்ளும்போது நாக்கை கொஞ்சம் அடக்கிக்கொள்கிறோம். ஆனால், நெருங்கியவர்களிடம் கோபம் கொள்ளும்போது வார்த்தைகளால் விளாசிவிடுகிறோம். இது சரியா? கொஞ்சம் யோசியுங்கள். தொடர்பை விடாதீர்கள் (Communication) : இந்த விஷயத்தை உறவுகளின் அஸ்திவாரக் கல் என்று சொல்லலாம். ஒரு சண்டையில் உங்கள் நாள் முடிய வேண்டாம். உங்களுக்குள் பிரச்னைகள் இருக்கலாம். அதைத் தீர்க்க முடியாமலும் இருக்கலாம். ஆனால், ஒருவர் மீது ஒருவர் கோபத்துடன் உறங்கச் செல்லாதீர்கள். நண்பர்களாகவே இருங்கள். நண்பர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் இருக்கும். அதனால் மற்றவர் கருத்துகளுக்கும் செவி கொடுங்கள். ஒரு விஷயத்தை மட்டும் கவனமாப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் இருவருக்கிடையே மௌனம் வந்து அமர்ந்து ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாமல் போய்விடக்கூடாது. சின்ன மௌனம் கூட நீண்டு, கடக்க முடியாத மௌனமாகிவிடும். உறவுகள் உடையாமலிருக்க நகைச்சுவையை ஒரு கேடயமாகப் பயன்படுத்தலாம். ஒருவரை பார்த்து ஒருவர் சிரிக்காமல் இருவரும் ஒன்றாகச் சிரித்தால் அந்த உறவு பலப்படும். எது எப்படியிருந்தாலும் ஒரு தம்பதி நல்ல நண்பர்களாக வாழ்ந்தால், அதைவிட நல்ல வாழ்க்கை இருக்க முடியுமா? விட்டுக்கொடுங்கள் (Compromise): ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்திருப்பீர்கள். புயல்காற்றில் பெரிய மரங்களும் விழுந்துவிடும். ஆனால், மெல்லிய நாணலுக்கு ஒன்றும் ஆகாது. காரணம், நாணல் காற்றின் வேகத்துக்கு ஏற்ப வளைந்து விட்டுக் கொடுக்கிறது. விட்டுக்கொடுத்தல் என்பது இழிவான செயலல்ல. தீர்க்க இயலாத சிக்கல்களுக்கு அது ஒரு எளிய மாற்று வழி. ஒரு கோட்டின் மத்தியில் இருவரும் சந்தித்துக்கொண்டால் அதில் வென்றவர் தோற்றவர் கிடையாது. மிதியடியாக இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், சில பிரச்னைகளுக்கு ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சம் விட்டுக்கொடுத்தால்தான் தீர்க்க இயலும். பெண்களுக்கு இயற்கையாகவே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கிறது. இதை அவர்களது பலவீனமாக கருதக்கூடாது. இது அவர்களுடைய பலம். அக்கறை காட்டுங்கள் (caring): அன்பின் ஆரம்ப உற்சாகத்தின்போது, இந்தப் பாசமும் அரவணைப்பும் எப்போதும் போகாது என்றுதான் தோன்றும். ஆனால், இந்த உணர்வை அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. அதை அக்கறையாகக் கவனித்துக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்திக் கொள்ளுங்கள். அதுவும் உங்கள் நேசத்தையும் பாசத்தையும் வார்த்தைகளால் வெளியே சொல்லுங்கள். ஏனென்றால், எந்த வயதிலும் அன்பான, பாசமான வார்த்தைகளைக் கேட்க நமது இதயம் ஏங்கிக் கொண்டே இருக்கும். உறுதியாய் இருங்கள் (Commitment): திருப்பித் திருப்பிச் சொல்வதுபோல் இருக்கிறது. ஓர் உறவுக்குள் நுழைய முடிவு செய்யும்போதே அது ஓர் உறுதியான விஷயமாகிவிடுகிறது. ஆனால், இந்த உறுதியை தினந்தோறும் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். சில சமயங்களில் ‘என்னடா இது விட்டுவிடலாம்’ என்று தோன்றும். ஆனால், அந்த எண்ணம் மட்டும் வேண்டாம். புயலடிக்கிறதோ, தென்றல் வீசுகிறதோ அன்பையும் பாசத்தையும் பகிர்ந்துகொள்வது என்று முடிவு செய்தபிறகு மனம் அலைபாயக் கூடாது. ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அன்பையும் பாசத்தையும் ஒரு மனிதருக்கு கொடுப்பதுபோல் ஆரம்பத்தில் இருந்தாலும் உண்மையில் நீண்ட நிலைத்த உறவுகளுக்குத் தான் அவற்றைக் கொடுக்கிறோம். நீடித்த உறுதியான உறவுகளுக்கு இதுவே அடிப்படையாக இருக்கும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 4015852831715621439

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item