வாசகிகள் கைமணம் 'கும்' முனு இருக்கு கோஸ் தொக்கு!

வாசகிகள் கைமணம் 'கும்' முனு இருக்கு கோஸ் தொக்கு! கோஸ் தொக்கு தேவையானவை: வதக்கி மிக்ஸியில் அரைத்த கோஸ் - ஒரு கப், வறுத்து பொ...

வாசகிகள் கைமணம்
'கும்' முனு இருக்கு கோஸ் தொக்கு!
கோஸ் தொக்கு
தேவையானவை: வதக்கி மிக்ஸியில் அரைத்த கோஸ் - ஒரு கப், வறுத்து பொடித்த வெந்தயம் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயம், கடுகு - சிறிதளவு, நல்லெண்ணெய் - 100 கிராம், வெல்லம், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெயை விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். இதில் மிளகாய்த்தூள் சேர்த்து அரைத்த கோஸ் விழுது, உப்பு சேர்த்து எண்ணெய் பிரி-யும் வரை வதக்கி இறக்கவும். வெந்தயத்தூள், வெல்லத்தை சேர்க்கவும். கோஸ் தொக்கு: ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி, வதக்கி அரைத்து சேர்த்தால் சுவையும் மணமும் அமோகமாக இருக்கும்
நூடுல்ஸ் சூப்
தேவையானவை: நூடுல்ஸ் - ஒரு பாக்கெட், பச்சை மிளகாய் - 5, பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை (வெங்காயம், குடமிளகாய், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு) - ஒரு கப், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், சீரகம், எலுமிச்சைச் சாறு - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, வெண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: சிறிது நூடுல்ஸை எண்ணெயில் பொரித்து தனியே வைக்கவும்.மீதமுள்ள நூடுல்ஸை கரகரப்பாக பொடித்து, நான்கு கப் தண்ணீரில் பத்து நிமிடம் வேக வைக்கவும். ஒரு கடாயில் வெண்ணெயைப் போட்டு உருகியதும், அதில் சீரகம், பச்சை மிளகாய், நறுக்கிய காய்கறிகள், உப்பு சேர்த்து வதக்கவும். காய்கறிகள் நன்றாக வதங்கியதும், வேக வைத்த நூடுல்ஸை அந்தத் தண்ணீருடன் இதில் சேர்க்கவும். மேற்கொண்டு சிறிது தண்ணீர் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி இறக்கவும். மேலாக வறுத்த நூடுல்ஸ், எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும் நூடுல்ஸ் சூப்: நூடுல்ஸை பொடித்து சேர்ப்பதற்கு பதிலாக சோள மாவு, மைதா மாவு தலா ஒரு டீஸ்பூன் கலந்து தண்ணீரில் கரைத்து சேர்க்கலாம்
கடாய் சட்னி!
தேவையான பொருள்கள்: தக்காளி - 4, வெங்காயம் - 1, தனியா - 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு - தலா 2 டீஸ்பூன், வரமிளகாய் - 4, இஞ்சி - 1 துண்டு (விருப்பப்பட்டால்), பூண்டு - 4 பல் (விருப்பப்பட்டால்), கறிவேப்பிலை - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு, தனியா, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலையை சிவக்க வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். பிறகு வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு, நறுக்கிய வெங்காயம் பொட்டு வதங்கியதும் நறுக்கிய தக்காளியைப் பொட்டு வதக்கவும். தக்காளி வதங்கியதும், தேவையான உப்பு சேர்த்து வறுத்த பருப்பு வகைகளுடன் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். விருப்பப்பட்டால் இஞ்சி, பூண்டு வதக்கும்போது சேர்த்து வதக்கி அவற்றுடன் சேர்த்து அரைக்கவும். ருசியான கடாய் செட்னி தயார். இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.
தேங்காய் பொடி!
தேவையான பொருள்கள்: முற்றிய தேங்காய்த் துருவல் - 1 கப், உளுத்தம் பருப்பு - 1/2 கப், கடலைப் பருப்பு - 1/4 கப், வர மிளகாய் - 1/4 கப் அல்லது 10, பெருங்காயத்தூள் - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கு செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தேங்காய்த் துருவலை சிவக்க வறுக்கவும். தேங்காய்த் துருவல் நல்ல மொறுமொறுவென்று ஆகும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு தனித்தனியாக கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பை சிவக்க வறுக்கவும். பிறகு வர மிளகாய், பெருங்காயத்தூள் பொட்டு வறுத்து, உப்பு சேர்த்து முதலில் பருப்புகளை மிக்ஸியில் அரைத்துக் கொண்டு பின் வறுத்த தேங்காய்த் துருவலைப் பொட்டுப் பொடிக்கவும். நன்றாகக் கலந்து ஒரு பாட்டிலில் பொட்டு உபயோகிக்கவும். இது மாறுதலான சுவையுடன் இருக்கும். இட்லி, தோசைக்கு ஏற்றது.

Related

சமையல் குறிப்புகள் 6758378493258664086

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item