முதுகு வலிக்கு என்ன தீர்வு?

நாம் எப்படி உட்கார்ந்து (அல்லது நின்று, படுத்து) ஒரு வேலையைச் செய்கிறோம் என்பதுதான் நமக்கு முதுகுவலி வருவதற்கு முக்கியமான காரணம். முதுகை வள...

நாம் எப்படி உட்கார்ந்து (அல்லது நின்று, படுத்து) ஒரு வேலையைச் செய்கிறோம் என்பதுதான் நமக்கு முதுகுவலி வருவதற்கு முக்கியமான காரணம். முதுகை வளைத்தபடி பைக் ஓட்டுவது, கனமான மெத்தையில் படுப்பது, குனிந்து சேரில் அமர்ந்தபடி எழுதுவது, ஒரு பக்கம் சாய்ந்தபடி நிற்பது, குனிந்து ஒரு பொருளை எடுப்பது என்று பல தவறான போஸ்களில்தான் நாம் பெரும்பாலும் பணியாற்றுகிறோம். அதுதான் பிற்காலத்தில் முதுகு வலியாக பிரச்னை ஏற்படுத்துகிறது. இதோ, எந்த போஸ் சரி, எது தவறு என்று விளக்குகிறார் பிஸியோதெரபிஸ்ட் டாக்டர் ப. கிருஷ்ணன். முதுகு வலிக்கு என்ன தீர்வு? சொல்கிறார் எலும்புநோய் டாக்டர் டேனியல் பெண்களின் 40 வயதுகளில் அதிகம் பாதிக்கப்படுவது முதுகு மற்றும் இடுப்பு வலியால்தான். அதிலும் தினமும் 20-30 கி.மீக்கு மேல் டூ-வீலர் ஓட்டுபவர்களுக்கு எலும்புத் தேய்வு அதிகம் ஏற்படுவதால் முதுகுவலி தவிர்க்க முடியாது. இதற்கு தைலம் மாத்திரைகள், குழந்தையை விட்டு மிதிக்கச் சொல்வது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு ட்ரீட்மெண்ட்டை வைத்திருக்கிறார்கள். இதில் தைலம், மாத்திரைகள் ஒருவிதமான சைட் எஃபெக்ட்டுகளை ஏற்படுத்தும் என்றால், கடைசியாக உள்ள மீதி வைத்தியத்தால் முதுகெலும்பின் இடைத்தட்டு நழுவி டிஸ்க் ப்ரோல்ப்ஸ் என்ற நிரந்தர நோய்க்கேகூட வழி வகுத்துவிடும். அதனால் முதுகு வலிக்கு உரிய ட்ரீட்மெண்ட் மற்றும் எக்ஸர்சைஸ் செய்து நிரந்தர நிவாரணம் பெற வழி தேட வேண்டும். இதில் நோயின் காரணத்தைச் சரியாக கண்டுபிடிப்பது தான் முதல்படி. சிறுநீரகக் கல்லால் வரும் வலி, முதுகெலும்புத் தட்டு நழுவியதால் ஏற்படும் வலி, முதுகெலும்பு தேய்ந்தால் வரும் வலி என ஏற்படும் வலிகளில் இவற்றில் எதனால் முதுகுவலி ஏற்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொண்டு ட்ரீட்மெண்ட் செய்து கொள்ளுங்கள். அதிலும், 75% முதுகு மற்றும் இடுப்பு வலியை உணவு, உடற்பயிற்சி மற்றும் பழக்க வழக்கங்களை மாற்றுவதன் மூலமே சரி செய்ய முடியும். பழக்க வழக்கங்களின் மூலம் முதுகு மற்றும் இடுப்பு வலியை எப்படி சரிசெய்வது? அதிகமாக வாகன சவாரி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. முதுகெலும்பை ஸ்ட்ரெச் செய்ய உதவும் உடற்பயிற்சிகளான, குப்புறப்படுத்து ஒவ்வொரு காலாகவும் பின் இரு காலையும், (மூட்டு வளைக்காமல்) உயர்த்துவது, ஒரே சமயத்தில் முன் பக்க உடலையும் கால்களையும் உயர்த்தி வயிறு தரையில் இருக்கும்படியாகச் செய்வது, மகாமுத்ரா, யோகமுத்ரா ஆசனங்களைச் செய்வது முதுகுவலிக்கு நல்ல தீர்வு. குளிர்ந்த உணவும் கூட முதுகுவலியை அதிகரிக்கும். பெண்களுக்கு 40 வயதுகளில் ஏற்படும் முதுகுவலிக்கு பெரும்பாலும் ஆஸ்டியோபோரோசிஸ் காரணமாக இருக்கக்கூடும். அதற்குத் தீர்வு கால்சியம் கையில் உள்ளது.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 6277819622788928295

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item