30 வகை ஓட்ஸ் உணவு! தொடர்ச்சி..

30 வகை ஓட்ஸ் உணவு! தொடர்ச்சி... ஓட்ஸ் ஃப்ளோட்டிங் பால்ஸ் தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், பால் - அரை லிட்டர், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்ப...

30 வகை ஓட்ஸ் உணவு! தொடர்ச்சி... ஓட்ஸ் ஃப்ளோட்டிங் பால்ஸ் தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், பால் - அரை லிட்டர், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சுக்கு - ஒரு சிறு துண்டு (தட்டிக் கொள்ளவும்), ஏலக்காய் - 2, நாட்டு வெல்லம் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஓட்ஸை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி ஆற விடவும். நாட்டு வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் உருட்டி வைத்த உருண்டைகளைப் போடவும். அவை வெந்து மேல் எழும்பி மிதக்க ஆரம்பித்துவிடும். இதனை வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும். இப்படியே எல்லா உருண்டைகளையும் செய்துக் கொள்ளவும். பிறகு அந்த தண்ணீரில் வெல்லம், ஏலக்காய், சுக்கு, தேங்காய் துருவல், உப்பு போட்டு கொதிக்க விட்டு இறக்கி ஆற வைத்து அதில் பாலை ஊற்றவும். ஒரு கிண்ணத்தில் பாதியளவு உருண்டைகளையும், மீதி பால் என விட்டு பரிமாறவும். -------------------------------------------------------------------------------- ஓட்ஸ் வடை தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரை கப், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), பச்சை மிளகாய் - 3 (வட்டமாக நறுக்க வேண்டும்), மிளகு, சீரகம் - கால் டீஸ்பூன் (ஒன்றிரண்டாக பொடிக்கவும்) இஞ்சி - சிறிய துண்டு (தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்), உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஓட்ஸில் வெந்நீரைத் தெளித்து ஊற வைக்கவும். உளுந்தை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, வெண்ணெய் போல் அரைத்துக்கொள்ளவும். இதனுடன் வெங்காயம் பச்சைமிளகாய், மிளகு, சீரகம், உப்பு, இஞ்சி, ஊற வைத்த ஓட்ஸைக் கலந்து, வடையாகவோ போண்டாவாகவோ சுட்டு எடுக்கவும். -------------------------------------------------------------------------------- ஓட்ஸ் ஸ்வீட் பட்டர் பன் தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், பன் - 6, வெண்ணெய், தேங்காய் துருவல், பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற டூட்டி ஃப்ருட்டி - தலா 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒன்றரை கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், செர்ரி பழம் - 4 (பொடியாக நறுக்கவும்). செய்முறை: ஓட்ஸில் வெந்நீர் தெளித்து இதை 5 நிமிடம் ஊற வைக்கவும். ஊறியதும் இதனுடன் ஒரு கப் சர்க்கரை, தேங்காய் துருவல், டூட்டி ஃப்ருட்டி, செர்ரி பழம் கலந்து வைத்துக் கொள்ளவும். மீதமிருக்கும் அரை கப் சர்க்கரையை மிக்ஸியில் போட்டு அரைத்து, இதனுடன் வெண்ணெயைக் கலந்து கிரீம் போல குழைத்துக் கொள்ளவும். பன்-ஐக் குறுக்காகக் கீறி அதனுள் ஓட்ஸ் கலவையையும், சர்க்கரை - வெண்ணெய் கலவையையும் வைத்துப் பூசி மூடவும். குறைந்த விலையில் சுவையான ஓட்ஸ் ஸ்வீட் பட்டர் பன் ரெடி! -------------------------------------------------------------------------------- ஓட்ஸ் கட்லெட் தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2, நன்கு வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி - கால் கப், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), கொத்தமல்லி - ஒரு கட்டு, எலுமிச்சம்பழம் - ஒரு மூடி, முட்டை - 1, உப்பு - தேவையான அளவு, ரஸ்க் தூள் - கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3. செய்முறை: ஓட்ஸில் வெந்நீர் தெளித்து, பத்து நிமிடம் ஊற வைக்கவும். இதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, முட்டை, எலுமிச்சம் பழச்சாறு எல்லாம் சேர்த்துக் கலந்து, கெட்டியாக பிசையவும். இந்தக் கலவையை வட்டமாகவோ முக்கோணமாகவோ தட்டி, ரஸ்க் தூளில் புரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றி சிவக்க வெந்தவுடன் எடுக்கவும். தக்காளி சாஸ¨டன் பரிமாறலாம் இந்த டேஸ்ட்டி கட்லெட்டை! -------------------------------------------------------------------------------- ஓட்ஸ் சூப் தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், பொடியாக நறுக்கிய மஞ்சள் - சிவப்பு - பச்சை குடமிளகாய் சேர்ந்த கலவை - ஒரு கப், வெண்ணெய் - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், பட்டை, பிரியாணி இலை - தலா 1, பால் - 2 கப், ஃப்ரெஷ் கிரீம் - அரை கப், உப்பு - தேவையான அளவு, பூண்டு - 3 பல். செய்முறை: ஓட்ஸை கொதிநீரில் பத்து நிமிடம் ஊற வைத்து பிறகு மத்தினால் மசித்துக் கொள்ளவும். இரண்டு கப் பாலில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, இதில் வெந்த ஓட்ஸைக் கலந்து கொதிக்க விடவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு அதில் பூண்டைத் தட்டிப் போட்டு, பட்டை, பிரியாணி இலை, குடமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும், இதில் வேக வைத்த ஓட்ஸைப் போட்டு கலக்கவும். பரிமாறும்போது மிளகுத்தூள், ஃப்ரெஷ் கிரீம் கலந்து பரிமாறவும். -------------------------------------------------------------------------------- ஓட்ஸ் பான் கேக் தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், நெய் - 2 டீஸ்பூன், ரவை - அரை கப், வெல்லம் - அரை கப், ஏலக்காய் - 2, தோல் கருப்பாக மாறிய வாழைப்பழம் - 1, வேர்க்கடலை - கால் கப், முந்திரி - 10, பசும்பால் - ஒரு கப், எண்ணெய் - தேவையான அளவு, சமையல் சோடா - சிறிதளவு. செய்முறை: வேர்க்கடலையைத் தோல் நீக்கி, நெய்யில் வறுத்துக் கொள்ளவும். முந்திரியை சிறிய துண்டுகளாக ஒடித்துக் கொள்ளவும். ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பவுடராக்கிக் கொள்ளவும். வெல்லத்தைப் பொடித்து தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். இதை ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கி, இதனுடன் ஓட்ஸ், ரவை, வாழைப்பழம், வேர்க்கடலை முந்திரிப்பருப்பு, பால், சமையல் சோடா, ஏலக்காய் கலந்து சிறிது நேரம் ஊற விடவும். தோசைக்கல்லில் வட்டமான கேக்குகளாக ஊற்றி, வெந்ததும் எடுக்கவும். -------------------------------------------------------------------------------- ஓட்ஸ் கிச்சடி தேவையானவை: ஓட்ஸ் - இரண்டு கப், பச்சைப் பட்டாணி, நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் சேர்ந்த கலவை - ஒரு கப், பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 4, தக்காளி - 4, எலுமிச்சம்பழம் - ஒரு மூடி, இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பட்டை, கிராம்பு - தலா 2, கொத்தமல்லி - ஒரு கட்டு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: ஓட்ஸை கொதி நீரில் 10 நிமிடம் போட்டு வடிகட்டவும். பச்சைப் பட்டாணி, கேரட், பீன்ஸை வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், முட்டை கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, முட்டைகோஸ் போட்டு வதக்கவும். இதனுடன் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும். இதில் வெந்த காய்கறிகளை சேர்த்து வதக்கி, தேவையான உப்பு சேர்த்து ஓட்ஸைப் போட்டுக் கிளறி இறக்கவும். எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லியை பொடியாக நறுக்கித் தூவி பரிமாறவும். -------------------------------------------------------------------------------- ஓட்ஸ் குருமா தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், பெரிய வெங்காயம், பழுத்த தக்காளி - தலா 1, பச்சை மிளகாய் - 2, தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய் - ஒரு மூடி, பட்டை, கிராம்பு - தலா 1, ஏலக்காய் - 2, நெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, சாம்பார் வெங்காயம் - 5, சோம்பு - ஒரு டீஸ்பூன். செய்முறை: மிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி அதனுடன், சாம்பார் வெங்காயம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கி, ஓட்ஸைப் போட்டுக் கிளறவும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்துக் கிளறி அரைத்த மசாலாவைப் போட்டுக் கொதிக்க வைத்து இறக்கவும். காய்கறி இல்லாதபோது செய்யக்கூடிய சூப்பர் குருமா இது. -------------------------------------------------------------------------------- ஓட்ஸ் கீர் தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், பால் - 2 கப், சர்க்கரை - ஓன்றரை கப், பாதாம், முந்திரிப்பருப்பு - தலா 10, வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், ஏதேனும் ஒரு எசென்ஸ் - ஒரு சொட்டு, கிஸ்மிஸ் பழம் 10. செய்முறை: முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு தலா 5 எடுத்து தோல் உரித்து பாலில் ஊற வைக்கவும். வேர்க்கடலையைத் தோல் நீக்கி நெய்யில் வறுத்துக்கொள்ளவும். இந்த மூன்றையும் மையாக அரைக்கவும். மீதம் உள்ள பாதாம், முந்திரிப்பருப்பை சிறிய துண்டுகளாக வெட்டி, நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். பாலுடன் ஓட்ஸைக் கலந்து நன்கு குழைய வேக வைக்கவும். இதனுடன் அரைத்த விழுதை சேர்த்துக் கலக்கவும். பிறகு சர்க்கரையைக் கொட்டி கிளறவும். ஓரளவு கெட்டியான பதத்தில் வந்ததும் இறக்கி வறுத்த முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, கிஸ்மிஸ் பழம், எசென்ஸ் கலந்து ஃபிரிட்ஜில் குளிர வைத்துப் பரிமாறவும். -------------------------------------------------------------------------------- ஓட்ஸ் இனிப்பு உண்டை தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், வெல்லம் - அரை கப், பயத்தம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் - ஒரு பெரிய துண்டு, எள் - ஒரு டேபிள்ஸ்பூன், சுக்கு - ஒரு சிறிய துண்டு. செய்முறை: ஓட்ஸை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை பல் பல்லாக நறுக்கி சிறிதளவு நெய்யில் வறுத்துக் கொள்ளவும். பயத்தம் பருப்பை வாசம் வரும்வரை வறுக்கவும். சுக்கைத் தூளாக்கிக் கொள்ளவும். எள்ளை வாசனை வரும் வரை வறுக்கவும். வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி விட்டு இளம்பாகு வைக்கவும். இதில் ஒட்ஸ் மாவைப் போட்டுக் கிளறவும். பிறகு இதனுடன் தேங்காய், எள், பயத்தம் பருப்பு, சுக்குத்தூள் போன்றவற்றைப் போட்டு கிளறி, இறக்கி, பொறுக்கக்கூடிய சூட்டில் உள்ளங்கையில் வைத்து சிறிது சிறிதாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஆவியில் வேக வைத்து எடுக்கவும். -------------------------------------------------------------------------------- ஓட்ஸ் மிக்ஸர் தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், கார்ன் ஃப்ளேக்ஸ், அவல், வேர்க்கடலை - தலா கால் கப், முந்திரிப்பருப்பு - 10, வெள்ளரி விதை - ஒரு டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, பூண்டு - 3 பல், மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை. செய்முறை: ஓட்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ், அவல் மூன்றையும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். கறிவேப்பிலையை எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும். ஒரு பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் ஒட்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ், முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, அவல் கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், வெள்ளரி விதை, பொட்டுக்கடலை எல்லாவற்றையும் கலந்து குலுக்கி, பாட்டிலில் போட்டு வைக்கவும். -------------------------------------------------------------------------------- ஓட்ஸ் சாண்ட்விச் தேவையானவை: ஓட்ஸ் - அரை கப், புதினா, கொத்தமல்லி - ஒரு கட்டு, பச்சைமிளகாய் - 2, தக்காளி - 2, வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2, பெரிய வெங்காயம் - 3, வேக வைத்த பச்சை பட்டாணி - கால் கப், கேரட் - 1 (பொடியாக துருவவும்), மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஓட்ஸை பத்து நிமிடம் கொதிநீரில் ஊற வைத்து வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, கேரட் சேர்த்து வதக்கவும். கேரட் வெந்ததும் அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, வேக வைத்த பச்சைப் பட்டாணி கலந்து கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், ஊற வைத்த ஓட்ஸ், உப்பு கலந்து சுருள வதக்கவும். கொத்தமல்லி, புதினா கலந்து இறக்கவும். டோஸ்டு செய்த ப்ரெட் ஸ்லைஸ் நடுவே இந்தக் கலவையை வைத்துப் பரிமாறவும். இதற்கு தொட்டுக் கொள்ள தக்காளி சாஸ் நன்றாக இருக்கும். -------------------------------------------------------------------------------- ஓட்ஸ் கார உண்டை தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய் - ஒரு துண்டு, கறிவேப்பிலை - சிறிது, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஓட்ஸை வாசனை வரும் வரை வறுத்து, ரவை பதத்தில் உடைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, மிளகாயை கிள்ளிப் போட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். தேங்காயை பல்லு பல்லாக நறுக்கி, தனியே சிவக்க வறுத்துக் கொள்ளவும். ஓட்ஸில் உப்பு சேர்த்து, எல்லாவற்றையும் போட்டு, குறைவாகத் தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். இதில் சிறிது எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்தவும். இப்படி எல்லாவற்றையும் செய்து கொண்டு ஆவியில் வேக வைத்து எடுக்கவும். -------------------------------------------------------------------------------- ஓட்ஸ் பிரதமன் தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், கறுப்பு வெல்லம் - அரை கிலோ, தேங்காய் - 3, ஏலக்காய் - 2, முந்திரி பருப்பு, கிஸ்மிஸ் - தலா பத்து, தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன். செய்முறை: ஏலக்காயை தட்டிக் கொள்ளவும். முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழத்தை தேங்காய் எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி முதலில் வரும் கெட்டிப்பாலைத் தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு வரும் இரண்டாம் பால், மூன்றாம் பாலைத் தனியாக வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை சுத்தம் செய்து அதில் மூன்றாவதாக எடுத்த தேங்காய்ப்பாலை ஊற்றி, கிளறிக் கொண்டே இருக்கவும். இது கெட்டியானதும் இரண்டாவதாக எடுத்த பாலை ஊற்றிக் கிளறவும். ஓரளவு கெட்டியாக வந்ததும், ஓட்ஸையும் மூன்றாவதாக எடுத்த பாலையும் ஊற்றிக் கிளறவும். இது தேன் நிறத்துக்கு வரும்போது இதனுடன் முந்திரி, ஏலக்காய், கிஸ்மிஸ் கலந்து இறக்கவும்

Related

சமையல் குறிப்புகள் 2023984331830339

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item