வாசகிகள் கைமணம்! பெங்களூர் மசாலா தோசை--மிளகு தேங்காய்ப் பால்-- பெங்காலி கொத்சு

தேவையானவை: புழுங்கல் அரிசி - 2 கப், பச்சரிசி, துவரம்பருப்பு - தலா ஒரு கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை கப், உருளைக்கிழ...

தேவையானவை: புழுங்கல் அரிசி - 2 கப், பச்சரிசி, துவரம்பருப்பு - தலா ஒரு கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை கப், உருளைக்கிழங்கு - கால் கிலோ, கடுகு, பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை, மஞ்சள்தூள் - சிறிதளவு, நறுக்கிய வெங்காயம் - ஒரு கப். காரச் சட்னிக்கு: பூண்டு - 5 பல், தேங்காய் - அரை மூடி, காய்ந்த மிளகாய் - 5, புளி - நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு. (எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்து 2 சிட்டிகை சர்க்கரை கலந்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்). உருளைக்கிழங்கு மசாலா: உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து மஞ்சள்தூள் தூவிப் பிசைந்து உருளைக்கிழங்கைப் போட்டுக் கலக்கவும். செய்முறை: புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை முந்தின நாளே தண்ணீரில் ஊறவைத்து சிறு குருணையாக அரைத்து உப்புப் போட்டு கரைத் துக் கொள்ளவும். மறுநாள் காலையில் 4 டீஸ்பூன் சர்க்கரை போட்டுக் கலக்கவும். தோசைக் கல் காய்ந்ததும் மாவை தோசையாக ஊற்றவும். வெந்து பொன்நிறமாக வந்ததும் ஒரு டீஸ்பூன் காரச் சட்னியைத் தடவி, உருளைக்கிழங்கு மசாலாவை சிறிது வைத்து மடித்து மொறுமொறுப்பாக பரிமாறவும். பெங்களூர் மசாலா தோசை: மசாலா சேர்க்க விரும்பாதவர்கள் தோசை மாவில் பொடியாக வெங்காயத்தை நறுக்கி கலந்து செய்யலாம். -------------------------------------------------------------------------------- தேவையானவை: மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், கருப்பட்டித்தூள் - 2 டேபிள்ஸ்பூன், தண்ணீர் - ஒரு டம்ளர், கெட்டியான தேங்காய்ப் பால் - அரை டம்ளர். செய்முறை: ஒரு பாத்திரத்தில் மிளகுத்தூள், கருப்பட்டித்தூள், தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். இது பாதியாக வற்றியதும் இறக்கி தேங்காய்ப் பாலை விட்டுக் கலந்து பரிமாறவும். இதை 3 நாட்கள் தொடர்ந்து குடித்தால் சளித் தொல்லை போய் விடும். தேங்காய்ப் பாலுக்குச் சளியைப் போக்கும் தன்மை உண்டு. அதனுடன் மிளகும் சேர்வதால் உடம்புக்கும் நல்லது. மிளகு தேங்காய்ப் பால்: மிளகுக் காரம் வேண்டாமென்றால் மிளகைப் பொடிக்காமல் நன்றாக வறுத்து, அதில் தண்ணீர், கருப்பட்டியை சேர்த்து கொதிக்க விடவும். பாதியாகக் குறுக்கிய தும் வடிகட்டி, தேங்காய்ப் பாலுடன் கலந்து பருகலாம். -------------------------------------------------------------------------------- தேவையானவை: உருளைக்கிழங்கு - அரை கிலோ, கசகசா - அரை கப், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் - 4, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்துக் கொள்ளவும். கசகசாவை 5 நிமிடம் வெந்நீரில் ஊறவைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூளைப் போட்டு தாளிக்கவும். இதில், வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் சேர்த்து கிளறி, கசகசா விழுதைக் கலந்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும். வெறும் சாதத்துடன் கலந்து சாப்பிட சூப்பராக இருக்கும். பெங்காலி கொத்சு: கசகசாவுடன் 2 முந்திரியை சேர்த்து அரைத்துச் செய்தால், சுவை அபாரமாக இருக்கும்.

Related

சமையல் குறிப்புகள் 2289823867197973971

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item